சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஆக.17) திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.
இதையடுத்து திருப்பத்தூர், நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டின் மழை நிலவரம்
அடுத்த இரண்டு நாள்களுக்கு (ஆக.18,19) கடலோர மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20.08.2021: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21.08.2021: திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்கக் கடல்: இன்றும், நாளையும் (ஆக.17, 18) வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதனைத் தொடர்ந்து இன்றும், நாளையும் (ஆக 17, 18) மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அரபிக்கடல்: இன்று (ஆக.17) முதல் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும், இடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதனால் மீனவர்களின் நலன் கருதி, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அர்ச்சகர்களை பணியிடை நீக்கம் செய்யவில்லை - முதலமைச்சர் ஸ்டாலின்