சென்னை: Weather News: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிச.29) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நாளை (டிச.30) கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
டிச.31 வானிலை நிலவரம்
கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜன.1, 2 வானிலை நிலவரம்
1.1.2022: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
2.1.2022: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மூடுபனி எச்சரிக்கை
இன்றும், நாளையும் 29.12.2021, 30.12.2021: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னையை நிலவரம்:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது - ஆளுநர் மாளிகை தகவல்