சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவ.11) மாலை கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை , செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இனறு (நவ.11) மாலை கரையை கடக்கும் நிலையில், இன்று மதியம் 1 மணி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடையாறு ஆற்றங்கரையோரப் பகுதி மற்றும் தாம்பரம் பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் கனமழை: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்..