ETV Bharat / state

ஆட்டோ மொபைல் சரக்குப் போக்குவரத்தில் சென்னை ரயில்வே கோட்டம் சாதனை - ரயில்வே கோட்டம் ரூ .17.77 கோடி வருவாய் ஈட்டி சாதனை

மார்ச் மாதத்தில் சென்னை ரயில்வே கோட்டம், முன் எப்போதுமில்லாத வகையில் அதிகபட்சமாக 74 சரக்கு ரயில்களை இயக்கியுள்ளது. இதன் மூலம் ரூ .17.77 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

Chennai Railway division sets new record in automobile freight

author img

By

Published : Apr 2, 2021, 11:44 AM IST

சென்னை: தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் மார்ச் 2021-ல், ஆட்டோ மொபைல் சரக்கு போக்குவரத்தில் தனது முந்தைய சாதனையை விஞ்சியுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

2021 மார்ச் மாதத்தில் சென்னை ரயில்வே கோட்டம் 74 சரக்கு ரயில்களை ஆட்டோ மொபைல் ஏற்றுமதிக்கான இயக்கியுள்ளது. இதில் 21 ரயில்கள் வாலாஜாபாத் சரக்கு பணிமனையிலிருந்தும், 53 ரயில்கள் மேல்பாக்கம் சரக்கு பணிமனையிலிருந்தும் இயக்கப்பட்டன. இந்த ஆட்டோ மொபைல் சரக்கு போக்குவரத்து மூலம் ஈட்டப்பட்ட வருவாய் ரூ .17.77 கோடி ஆகும். மொத்தம் 1,923 வேன்களில் ஆட்டோ மொபைல் சரக்குகள் ஏற்றப்பட்டன.

2020-2021 நிதியாண்டில் ஒரே மாதத்தில் கையாளப்பட்ட ஆட்டோ மொபைல் போக்குவரத்துக்கான சரக்கு ரயில்கள் மற்றும் ஈட்டப்பட்ட வருவாய் ஆகியனவற்றுள் இதுவே மிக அதிகமானதாகும். இதுவரை பிப்ரவரி 2021ல் கையாளப்பட்ட 64 சரக்கு ரயில்களே இந்த 2020-2021 நிதியாண்டில் ஒரு மாதத்தில் இயக்கப்பட்ட சரக்கு ரயில்களுக்கான அதிகபட்ச எண்ணிக்கையாக கருதப்பட்டது. இந்தச் சாதனையை சென்னை ரயில்வே கோட்டம் 2021 மார்ச் மாதத்தில் முறியடித்துள்ளது.

காரணம், பிப்ரவரி 2021இல் மொத்தம் 64 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. இதில் வாலாஜாபாத் சரக்கு பணிமனையிலிருந்து 21 ரயில்களும், மேல்பாக்கம் சரக்கு பணிமனையிலிருந்து 43 ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மொத்தம் 1,675 பெட்டிகளை கொண்ட இந்த 64 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டது மூலம் ரயில்வே துறைக்கு 15.5 8 கோடி வருவாய் கிடைத்தது.

இந்த வரிசையில் 2020 நவம்பர் மாதத்தில் இயக்கப்பட்ட சரக்கு ரயில்கள் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதில் வாலாஜாபாத் சரக்கு பணிமனையிலிருந்து 23 ரயில்களும், மேல்பாக்கம் சரக்கு பணிமனையிலிருந்து 36 ரயில்களும் இயக்கப்பட்டன. மொத்தம் 1,544 பெட்டிகள் இந்த 59 சரக்கு ரயில்கள் மூலம் இயக்கப்பட்டதன் விளைவாக ரூபாய் 14.50 கோடி வருவாயை சென்னை ரயில்வே கோட்டம் ஈட்டியது.

கரோனா அச்சுறுத்தல் இருந்தபோதிலும், சென்னை ரயில்வே கோட்டம் கடந்த 2019-20 நிதியாண்டில் ஈட்டிய மொத்த வருவாயான ரூபாய் 98 கோடியைவிட 24 விழுக்காடு உயர்ந்து ரூபாய் 117 கோடி பெற்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.