சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் 2023, ஜூன் 14-ல் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.
அவரது ஜாமீன் மனு முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், மருத்துவ காரணங்களின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்தது. இதை அடுத்து, அந்த மனு வாபஸ் பெறப்பட்டது. ஜாமீன் கோரி மீண்டும் அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில், அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலமாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக இன்று (டிச.15) ஆஜர்படுத்தபட்டார். இதனையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 13ஆவது முறையாக நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, அவரது இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
தைத் தொடர்ந்து, கடந்த 100 நாட்களுக்கு மேலாக இலாகா இல்லாத அமைச்சராகச் செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து வந்தார். இவை ஒருபுறமிருக்க, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்க்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கின் விசாரணை 2024, ஜனவரி 3ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு.. எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!