ETV Bharat / state

வீடு புகுந்து ரவுடி வெட்டிக் கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! - chennai rowdy murder news

சென்னை: வீடு புகுந்து ரவுடியை கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக உள்ள கும்பலைக் காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

cheenai murder rowdy
cheenai murder rowdy
author img

By

Published : Jul 8, 2020, 11:18 AM IST

சென்னை, ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ராஜ் (29). இவருக்குத் திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். இவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து கொண்டு, ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு (ஜூலை 7) ஸ்ரீகாந்த் அவரது நண்பர் கார்த்திக்குடன் ஆழ்வார் திருநகரில் உள்ள ஸ்ரீகாந்தின் தந்தை பாலசுப்பிரமணியம் (51) வீட்டிற்கு மது அருந்தச் சென்றுள்ளார்.

மது அருந்திக் கொண்டு இருக்கும்போது, பாலசுப்பிரமணியன் கடைக்குச் சென்று உணவு வாங்கிவிட்டு வருவதாகக் கூறி வெளியே சென்றுள்ளார்.

பின்னர், உணவு வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து பார்க்கும் போது, ஸ்ரீகாந்த் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அருகில் அமர்ந்து மது அருந்திய நண்பர் கார்த்திக்கும் மாயமாகியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணியன், உடனடியாக கோயம்பேடு காவல் நிலையத்திற்குப் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீகாந்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த அவர்கள் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், ஸ்ரீகாந்துக்கும் அதே பகுதியில் வசித்து வரும் வெள்ளை மணி கும்பலுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி நிலவி வந்ததாகவும், இதனால் இந்தக் கும்பல் ஸ்ரீகாந்த்தை கொலை செய்து இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும், வெள்ளை மணி கும்பல் தலைமறைவாக இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஏற்கெனவே, ஸ்ரீகாந்த் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பிரேசில் அதிபருக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.