ETV Bharat / state

தீரன் பட பாணியில் ரியல் சம்பவம்.. கொல்கத்தாவில் முகாமிட்டு குற்றவாளிகளைப் பிடித்த சென்னை போலீஸ்!

ஜம்தாரா கும்பலை விட 10 மடங்கு சைபர் குற்றங்களில் ஈடுபடும் மாவட்டத்திலிருந்து சைபர் கிரைம் கும்பலை சென்னை காவல் துறையினர் தீரன் பட பாணியில் கொல்கத்தாவில் முகாமிட்டு, சுற்றி வளைத்து பிடித்து சம்பவம் நடந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 12, 2023, 10:13 PM IST

Updated : May 12, 2023, 11:06 PM IST

தீரன் பட பாணியில் ரியல் சம்பவம்.. கொல்கத்தாவில் முகாமிட்டு குற்றவாளிகளைப் பிடித்த சென்னை போலீஸ்!

சென்னை ஏழு கிணறு போர்ச்சுக்கீசியர் தெருவைச் சேர்ந்தவர், சாந்தி. இவரது கணவர் அருண்குமார். இவர்களது மூத்த மகள் மகாலட்சுமி (19). கருத்து வேறுபாடு காரணமாக சாந்தி தனது கணவர் அருண்குமாரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மகாலட்சுமி தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள தனது குடும்பத்தினரின் சுமையைப் போக்க சம்பாதிக்கும் முயற்சியில் மகாலட்சுமி ஈடுபட்டார். அப்போது இன்ஸ்டாகிராமில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டலாம் என்ற விளம்பரத்தைக் கண்ட மகாலட்சுமி, அதில் முதலீடு செய்துள்ளார். சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.

ஆனால், அனைத்துயும் மோசடி கும்பல் சுருட்டிக்கொண்டு மகாலட்சுமியை ஏமாற்றிவிட்டது. இதனால், மனவுளைச்சலில் இருந்த மகாலட்சுமி கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனையறிந்த முத்தியால்பேட்டை காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டறியும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

மோசடி நிறுவனம் தொடங்கி, இன்ஸ்டாகிராம் ஐடி உருவாக்கிய செல்போன் எண் மற்றும் மாணவி செலுத்திய பணத்தின் வங்கி கணக்கு விவரங்களை வைத்து தனிப்படை காவல் துறையினர் குற்றவாளிகளைத் தீவிரமாக தேடினர். அப்போது, கொல்கத்தா கிதிர்பூர் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம்மில் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதும், 4 நாட்களுக்கு ஒரு முறை வந்து அதே ஏடிஎம்மில் மோசடி கும்பல் பணம் எடுப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து தனிப்படை காவல் துறையினர் கொல்கத்தா மாநிலத்திற்கு விரைந்து, சிசிடிவி காட்சிகளை வைத்து, அதே ஏடிஎம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், மோசடி கும்பல் அங்கு வரவில்லை. இதனையடுத்து மோசடி கும்பல் பயன்படுத்திய செல்போன் எண்ணில் ஆன்லைன் உணவு டெலிவரி ஆர்டர் செய்தது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

உடனடியாக அந்த ஆன்லைன் டெலிவரி நிறுவனத்திலிருந்து, அந்த மோசடி கும்பலின் முகவரியைப் பெற்ற சென்னை காவல் துறையினருக்கு குற்றவாளிகள் கிதிர்பூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. மோசடி கும்பலைப் பிடிப்பதற்காக கொல்கத்தா காவல் துறையினரின் உதவியை சென்னை காவல் துறையினர் நாடிய போது, அந்த பகுதியில் அவ்வளவு எளிதாக காவல் துறையினர் நுழைய முடியாது எனக் கூறியுள்ளனர்.

ஆனால், சென்னை காவல் துறையினர் விடாப்பிடியாக மோசடி கும்பல் பதுங்கிய பகுதிக்கு விரைந்தனர். பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்த 3 பேர் கொண்ட மோசடி கும்பலை சென்னை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் கொல்கத்தா மாநிலத்தைச் சேர்ந்த அமானுல்லா கான் (20), முகமது பைசல் (21) மற்றும் முகமது ஆசிப் இக்பால் (22) என்பது தெரியவந்தது.

பின்னர் இவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பணக்கார குடும்பத்தில் பிறந்த மூன்று பேரும் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக சைபர் கிரைம் மோசடி செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. குறிப்பாக இவர்கள் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டெலிகிராம் மூலமாக ‘I am aadvika kapoor’ மற்றும் ‘I am single’ என பல்வேறு பெயர்களில் ஐடி உருவாக்கி 750 ரூபாய் செலுத்தினால் 20 நிமிடங்களில் 2ஆயிரத்து 500 ரூபாய் லாபம் கிடைக்கும் என கவர்ச்சி விளம்பரங்களை அறிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோரிடம் தாமாக சென்று கவர்ச்சி விளம்பரங்களை பெர்சனலாக அனுப்புகின்றனர். கவர்ச்சி விளம்பரங்களை நம்பிய கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பலரும், அதிக வட்டியை நம்பி அவர்களது ஜிபே (Google Pay) எண்ணிற்குப் பணத்தைப் போட்டு, முதலில் லாபம் கொடுப்பது போல பாவலா காட்டிவிட்டு, பின்னர் அதிக பணம் செலுத்த வைத்து ஜிஎஸ்டி, அனுமதி கட்டணம் என பொய்யாக கூறி, மொத்தமாக சுருட்டிக்கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதேபோல தான், இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி மகாலட்சுமி 30 ஆயிரம் ரூபாய் வரை இழந்து, மனவுளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. சென்னை உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு இளைஞர்களிடம் இதே போல மோசடி செயல்களில் ஈடுபட்டு, 20 லட்சம் ரூபாய் சுருட்டி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடி செய்த பணத்தில் மூன்று இளைஞர்களும் ஐபோன், விலையுயர்ந்த ஆடை, தாய்லாந்து சுற்றுப்பயணம் என உல்லாசமாக வாழ்க்கை அனுபவித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்ஸ்டா ஐடி
இன்ஸ்டா ஐடி

குறிப்பாக ஜம்தாரா சைபர் கிரைம் கும்பல் போல, கொல்கத்தாவில் கிதிர்பூர், பட்காஞ்சி, இக்பால்பூர் ஆகியப் பகுதிகளில் பெரும்பாலான மக்கள் சைபர் குற்றங்களில் ஈடுபடுவதாகவும், ஜம்தாராவை விட 10 மடங்கு இந்தப் பகுதிகளில் சைபர் கிரைம் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றச்செயல்களில் ஈடுபட்டோரை இதுவரை எந்த மாநில காவல் துறையினரும் நெருங்கியதில்லை எனவும்; முதல்முறையாக சென்னை காவல் துறையினர் தான் நெருங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் ஆர்பிஐ அனுமதி வழங்கிய நிதி நிறுவனத்தில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் வரும் தேவையில்லாத விளம்பரம் மற்றும் லிங்குகளைத் தொட வேண்டாம் என வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் ரம்யாபாரதி தெரிவித்துள்ளார். மேலும், இழந்த தொகை என்னவோ குறைவு தான்; ஆனால் அதன் மூலமாக ஏற்பட்ட இழப்பு பெரிதளவு என்பதால் மெனக்கெட்டு குற்றவாளிகளை கைது செய்து இருப்பதாகவும், மீண்டும் இது போன்ற மோசடி செயல்களில் ஒருவரும் உயிரிழக்கக் கூடாது என்ற நோக்கம் மட்டுமே எனத் தெரிவித்தார்.

cyber குற்றவாளிகள்
cyber குற்றவாளிகள்

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்த வங்கிக் கணக்கில் இருந்த 10 ஆயிரம் ரூபாயை காவல் துறையினர் முடக்கி உள்ளனர். இதனையடுத்து சந்தேக மரணம் என்ற வழக்கை மாற்றி தற்கொலைக்குத் தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 'இறந்துபோன உங்க அம்மா கூட பேசுறேன்'என ரூ.2 கோடி வரை சுருட்டிய கேரள போலி மந்திரவாதி கைது!

Last Updated : May 12, 2023, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.