ETV Bharat / state

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு நிறைவு - நீட் தேர்வு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நிறைவு பெற்றது. தேர்வெழுதிய மாணவர்கள் உற்சாகமாக தேர்வு அறையிலிருந்து வெளியேறினர்.

நீட் தேர்வு
author img

By

Published : May 5, 2019, 5:23 PM IST

Updated : May 5, 2019, 10:49 PM IST

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் 2019- 20 ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு ( நீட்) இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மாணவ மாணவிகள் வசதிக்கேற்ப நீட் தேர்வு பிற்பகலில் நடைபெற்றது. 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்நிலையில், ஆவடியில் செயின்ட் பீட்டர் கல்லூரியிலும் விவேகானந்தா வித்யாலயா பள்ளி, அம்பத்தூர் அடுத்த கொரட்டூரில் உள்ள பக்தவச்சலம் பள்ளியிலும் தேர்வு நடைபெற்றது. இந்த மூன்று மையங்களில் நடைபெற்ற தேர்வில் 2,820 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

நீட் தேர்வெழுத வந்த சென்னை மாணவர்கள் அவதி

இந்நிலையில், 12 மணியளவில் மாணவர்கள் தேர்வு எழுத வந்தபோது வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. நிழலுக்காக அமைக்கப்படும் பந்தல் அமைக்கப்படாததால் மாணவர்கள் வெயிலால் அவதிப்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், 'நாங்கள் பல கிலோ மீட்டர் பயணம் செய்து தேர்வு எழுத இங்கு வந்துள்ளோம். எங்களுக்கு மையத்தின் வெளியிலே எவ்வித வசதியும் செய்து தரப்படவில்லை. குறைந்தபட்சம் ஷாமினா பந்தல் கூட போடப்படவில்லை. இதனால் நாங்கள் வெட்ட வெளியில் வெயிலிலே இரண்டு மணி நேரத்திற்கு மேல் நின்று அவதிப்பட்டோம் என சோர்வான முகத்துடன் தெரிவித்தனர்.

05.05.19
திருவள்ளுர்
ஆவடி_ஆ.கார்த்திக்

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள் உள்ளே அனுமதிக்கபடாததால் கொளுத்தும் வெயிலில் நின்று தவித்தனர்.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் 2019- 20 ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு ( நீட்) இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு மாணவ மாணவிகள் வசதிக்கேற்ப நீட் தேர்வு பிற்பகலில்  நடைபெற்றது. அதன்படி, தேர்வு 2மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடையவுள்ளது. இந்நிலையில்,  ஆவடியில் செயின்ட் பீட்டர் கல்லூரியிலும் விவேகானந்தா வித்யாலயா பள்ளி, அம்பத்தூர் அடுத்த கொரட்டூரில் உள்ள பக்தவச்சலம்  பள்ளியிலும் நடந்து வருகிறது.மேற்கண்ட மூன்று மையங்களிலும் 2820 மாணவ மாணவர்கள் மதியம் தேர்வு எழுதினர்.இவர்கள் சென்னை, புறநகர், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வந்திருந்தனர். மேற்கண்ட மூன்று தேர்வு மையங்களிலும் சுமார் 12மணியளவில் மாணவர்கள் வந்து குவிந்தனர். ஆனால், அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் வெளியே கொளுத்தும் வெயிலிலேயே நின்று கொண்டிருந்தனர். இதில், ஒரு சிலர் குடை பிடித்தபடி இருந்தனர். இந்த மையங்களின் முன்பு எவ்வித பந்தல்கள் அமைக்கப்படாததால் மாணவர்கள் வெயிலால் அவதிப்பட்டனர். இது குறித்து மாணவர்கள் கூறுகையில் நாங்கள் பல கிலோ மீட்டர் பயணம் செய்து தேர்வு எழுத இங்கு வந்துள்ளோம். எங்களுக்கு மையத்தின் வெளியிலே எவ்வித வசதியும் செய்து தரப்படவில்லை. குறைந்தபட்சம் சாமினா பந்தல் கூட போடப்படவில்லை. இதனால் நாங்கள் வெட்ட வெளியில் வெயிலிலே இரண்டு மணி நேரத்திற்கு மேல் நின்று அவதிப்பட்டோம். இதில், சோர்வடைந்த நாங்கள் பலர் தேர்வு மையத்தில் எப்படி சிறப்பாக தேர்வு எழுத முடியும். எங்களை குறைந்தபட்சம் மையத்தில் காம்பவுண்டுக்குள்ளேயே அனுமதித்து நிற்க வைத்து இருக்கலாம். இதை கூட அதிகாரிகள் செய்ய முன் வரவில்லை. வருங்காலங்களில் எங்களை மையத்தின் உள்ளே அமர வைத்து, அதன் பிறகு சோதனை செய்து உள்ளே அனுப்ப வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.
Last Updated : May 5, 2019, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.