ETV Bharat / state

சிறுமிக்கு கருக்கலைப்பு..! லஞ்சத்தால் சிக்கிய போலீஸ் - மருத்துவர்கள் மீது நடவடிக்கை என்ன?

author img

By

Published : Jul 15, 2023, 12:31 PM IST

Updated : Jul 15, 2023, 4:20 PM IST

17 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக தனது தனியார் கிளினிக்கில் கருக்கலைப்பு செய்த அரசு மருத்துவமனை மருத்துவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைனர் சிறுமிக்கு கருக்கலைப்பு
மைனர் சிறுமிக்கு கருக்கலைப்பு

சென்னை: மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் பிணக்கூறாய்வு நிபுணராகப் பணிபுரிபவர், மருத்துவர் பராசக்தி. இவரது கணவர் மோகன் குமார் என்பவர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியர் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் தனியார் கிளினிக் ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மறைமலை நகரில் உள்ள ஒரு தனியார் கிளினிக்குக்கு 17 வயது நிரம்பிய சிறுமி ஒருவரை சிலர் அழைத்து வந்துள்ளனர். அந்த மருத்துவமனையை நடத்துபவர் உமா மகேஸ்வரி என்ற மருத்துவர். உமா மகேஸ்வரியை அணுகிய அவர்கள், 17 வயது சிறுமி கர்ப்பமாக உள்ளதாகவும், அதைக் கலைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

சிறுமியை ஸ்கேன் செய்து பார்த்தபோது அந்த சிறுமி 16 வார கால கர்ப்பமாக உள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் அந்தச் சிறுமியை சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள தனது தோழியும், அரசு மருத்துவருமான பராசக்தி நடத்தும் தனியார் கிளினிக்குக்கு வந்துவிடுமாறு உமா மகேஸ்வரி கூறியுள்ளார்.

அந்த தனியார் கிளினிக்கில் மருத்துவர் பராசக்தி மற்றும் உமா மகேஸ்வரி ஆகிய இருவரும் இணைந்து அந்த சிறுமிக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாகத் தெரிகிறது. அதன் பின்னர் மகளுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது சிறுமியின் தந்தைக்குத் தெரிய வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் மகளை விசாரித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞர் சிறுமியின் கர்ப்பத்துக்குக் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து ஆவேசமடைந்த சிறுமியின் தந்தை, இது குறித்து கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதாவிடம் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட மகிதா உடனடியாக விரைந்து செயல்பட்டு சிறுமியின் கர்ப்பத்துக்குக் காரணமான ரஞ்சித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.

அத்தோடு நின்று விடாமல் சிறுமியிடம் எங்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது போன்ற விவரங்களை கேட்டு அறிந்தார், ஆய்வாளர் மகிதா. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் உமா மகேஸ்வரி மற்றும் பராசக்தி ஆகிய இருவரையும் அழைத்த ஆய்வாளர் மகிதா, 17 வயது நிரம்பிய சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்தது சட்ட விரோதம் என்று கடுமையாக விசாரணையை ஆரம்பித்துள்ளார்.

மேலும், இந்த விஷயத்தில் உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறி, அவ்வாறு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக உமா மகேஸ்வரியிடம் இரண்டு லட்சம் ரூபாயும், மருத்துவமனை உரிமையாளரான பராசக்தியிடம் 10 லட்சம் ரூபாயும் லஞ்சமாக கேட்டுப் பெற்றுள்ளார், மகிதா.

லஞ்சத்தை கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்த மருத்துவர் பராசக்தி 10 லட்சம் ரூபாயை பறிகொடுத்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இவர் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் பிணக்கூறாய்வு மருத்துவராக இருப்பதால் காவல் துறையில் நல்ல செல்வாக்கு பெற்றவராக இருந்து வருகிறார். எனவே, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காவல் ஆய்வாளர் மதிதா தன்னிடம் 10 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார் என்று தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆணையர் அமல்ராஜ், இது குறித்து விசாரித்தபோது கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா லஞ்சம் பெற்றது உறுதியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக மகிதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட அமல்ராஜ், அவர் மீது வழக்குப் பதியவும் செய்தார். இதனையடுத்து மகிதா தலைமறைவாகிவிட்டார்.

இதனிடையே சட்டவிரோத கருக்கலைப்புக்காக லஞ்சம் பெற்ற ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுத்தது எல்லாம் சரிதான். ஆனால், 17 வயது நிரம்பிய மணமாகாத சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தது மட்டுமல்லாமல், நடவடிக்கையில் இருந்து தப்பிக்க லஞ்சத்தைக் கொடுத்த மருத்துவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

பொதுவாக மணமாகாத மைனர் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்வதே சட்டவிரோதம். அதிலும் 14 வாரங்களுக்கு உட்பட்ட கர்ப்பமாக இருந்தால் மட்டுமே, தகுந்த காரணங்களின் அடிப்படையில் கருக்கலைப்பு பற்றி பரிசீலனை செய்யலாம். 14 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்ப காலமாக இருந்தால் இரண்டு மருத்துவர்கள் சேர்ந்து அரசு மருத்துவமனையில் மட்டுமே கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்பது சட்டம்.

எனவே இந்த விவகாரம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், டிஜிபி, மருத்துவத் துறை இணை இயக்குனர் ஆகியோருக்கு ஒரு நபர் இமெயில் மூலம் புகார் அனுப்பி உள்ளார். உடனடியாக இது குறித்து விசாரிக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், மருத்துவத் துறை இணை இயக்குநருக்கு உத்தரவிட்டு உள்ளதாகத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து நேற்று சென்னை குரோம்பேட்டில் உள்ள இணை இயக்குநர் அலுவலகத்தில் புகார் அனுப்பிய நபர் மற்றும் சம்பந்தப்பட்ட பராசக்தி, உமா மகேஸ்வரி ஆகிய இரு மருத்துவர்களை அழைத்து இணை இயக்குநர் விசாரணை நடத்தியுள்ளார்.

மேலும், ஓரிரு மாதங்களுக்கு முன்னதாக கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த விஜயலட்சுமி என்பவர், இரவு ரோந்துக்கு செல்லும்போது ஜூஸ் கடை ஒன்றில், இலவசமாக ஜூஸும், தின்பண்டங்களும் கேட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

இதனால் விஜயலட்சுமியை காவல் துறை சஸ்பெண்ட் செய்திருந்தது. அவருக்குப் பதிலாக அதே காவல் நிலையத்துக்கு பணியமர்த்தப்பட்டவர்தான், மகிதா. பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே அரசு மருத்துவர்களை மிரட்டி 12 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு சஸ்பெண்டான மகிதாவின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் நம்மிடம் கூறும்போது, இணை இயக்குநரின் விசாரணை அறிக்கை தனக்கு இன்னும் வரவில்லை என்றும், அறிக்கை வந்த பிறகு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இணை இயக்குநர் தீர்த்தலிங்கத்தை தொடர்பு கொண்டபோது, சம்பந்தப்பட்ட பராசக்தி மற்றும் உமாமகேஸ்வரி ஆகிய இரு மருத்துவர்களை விசாரணை செய்துள்ளதாகவும், மேலும் சிலரிடம் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார். விசாரணை முடிந்த பிறகு அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிரபல ரவுடியின் உறவினரை கொலை செய்து கிணற்றில் வீசிய நண்பர்கள் கைது!

Last Updated : Jul 15, 2023, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.