ETV Bharat / state

மே முடிந்தாலும் நான் விடமாட்டேன்.. வெயில் குறித்து வானிலை மையம் கொடுத்த ஷாக்! - weather update today

தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில், வெப்பநிலை இயல்பில் இருந்து 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மே முடிந்தாலும் நான் விடமாட்டேன்.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த ஷாக்

author img

By

Published : Jun 2, 2023, 2:04 PM IST

சென்னை: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று (ஜூன்2) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

இதனையடுத்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளின் ஓரிரு இடங்களில் நாளை (ஜூன் 3) மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 4) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தொடர்ந்து, வருகிற 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

இன்று முதல் ஜூன் 4ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும். அதிலும், ஓரிரு இடங்களில் இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். அதேநேரம், இன்று முதல் வருகிற 6ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும்.

இன்று கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். நாளை கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும்.

அது மட்டுமல்லாமல், வருகிற 4 மற்றும் 5ஆகிய தேதிகளில் லட்சத்தீவு பகுதிகள், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 29 அடியில் குளமாக மாறிய பாபநாசம் அணை… விவசாயிகள் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.