கரோனா பாதிப்புக்குப் பிறகு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகளில் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு தூய்மைப்படுத்தும்போது நாட்டிலேயே முதல் முறையாக உடலுக்கு ஊறு விளைவிக்காத நீர் வடிவிலான கிருமிநாசினியை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது.
இடிஏ எனும் தொழில்நுட்பம் மூலம் மூச்சுக்காற்று கலந்த நுண்ணிய நிரமற்ற திரவ வடிவிலான கிருமிநாசினிகளால் வேதியியல் தன்மை தவிர்க்கப்படுகிறது.
இதனால் கைகளில் மட்டுமின்றி காற்றிலும் கரோனா தொற்று பரவாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதுவரை அதிநவீன மருத்துவமனைகள், பாதுகாப்பு அமைப்புகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த வகை தொழில்நுட்பத்தை சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து முறைகளில் அமல்படுத்தியுள்ளது.
இந்தக் கிருமிநாசினி கைகள் மட்டுமல்ல உடல் உறுப்புகளில் பட்டாலும் எந்தவித தீங்கும் விளைவிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.