ETV Bharat / state

உஷாரய்யா உஷாரு!... மேலும் 4 டிகிரி செல்சியஸ் உயரும் வெப்பம்; வானிலை ஆய்வு மையம் தகவல்! - heat stroke

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகப்பட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Meteorological Dept
வானிலை ஆய்வு மையம் தகவல்
author img

By

Published : May 16, 2023, 2:18 PM IST

சென்னை: வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு காரணமாகன் “மோக்கா” என்ற புயல் உருவானது. அந்தப் புயல் வழுவடைந்த பின்னர் தற்போது தமிழ்நாட்டில் சில பகுதிகளில் மிதமான மழையும், பல இடங்களில் வெப்பமும் அதிகரித்து வருகிறது. அதனடிப்படையில், தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு சுமார் 100 டிகிரி செல்சியஸ்-ஐ தாண்டி இருந்து வருகின்றது. இந்த நிலையில், மேலும் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "மேற்குத் திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (மே 16) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதாவது தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 17 முதல் மே 20ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆனால், சென்னையில் வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். வெப்பச் சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: நீலந்தாங்கல் அரசுப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிப்பு: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக குற்றச்சாட்டு!

அதிகப்பட்ச வெப்பநிலை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகப்பட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி வரை செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். எனவே மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகப்பட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 - 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றும், நாளையும் தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: சேலத்தில் ஐஜேகே நிர்வாகி வெட்டிக் கொலை: 3 பேர் கொண்ட மர்மக் கும்பலுக்கு போலீசார் வலை வீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.