ETV Bharat / state

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் - Chennai Latest News

சென்னை : தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Meteorological Center Latest  Information

author img

By

Published : Sep 16, 2020, 4:05 PM IST

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆந்திர கடற்கரை மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆந்திரா, தெலங்கானா கடற்கரை பகுதிகளில் வளிமண்டல சுழற்சியாக நீடிக்கிறது.

இதன் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னை, புதுச்சேரியில் லேசான மழையும் பெய்ய கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும. மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை செப்டம்பர் 18, 19ஆம் தேதிகளில் மன்னார் வளைகுடா, தென்மேற்கு, தென்கிழக்கு, வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 20 வரை கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு பகுதிகளிலும் வட கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.