ETV Bharat / state

தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களுக்கு மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் - வானிலை ஆய்வு மையம்

TN Weather Report: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 3:29 PM IST

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (அக்.08) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல், நாளை (அக்.09) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதைத் தொடர்ந்து, அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகள் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 48 மணி நேரம்: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மழைப்பதிவு: மதுரை, ராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, கடலூர், காஞ்சிபுரம், வேலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், சிவகங்கை, திருப்பத்தூர் விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் 6.செ,மீ முதல் 1.செ.மீ வரையிலான மழைப் பதிவாகி உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “சிறிய கிராமங்களை மேம்படுத்தினால் இந்தியா தானாக மேம்படும்” - எம்பி ஜெயந்த் சின்ஹா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.