ETV Bharat / state

ஆன்மிக கண்காட்சி முன்னோட்ட கலை நிகழ்ச்சியில் 10 ஆயிரம் மாணவிகள் பங்கேற்பு!

சென்னை: மீனம்பாக்கத்தில் நடைபெற்ற ஆன்மிக கண்காட்சி முன்னோட்ட கலை நிகழ்ச்சியில் 10 ஆயிரம் மாணவிகள் கலந்து கொண்டனர்.

சென்னை மீனம்பாகத்தில் கலை நிகழ்ச்சி சென்னை மீனம்பாக்கம் ஆன்மிக கண்காட்சி முனோட்டம் சென்னை மீனம்பாக்கம் ஆன்மிக கண்காட்சி Chennai Meenambakkam Music Festival Meenambakkam Music Program Chennai Meenambakkam Spiritual Exhibition
Chennai Meenambakkam Music Festival
author img

By

Published : Jan 25, 2020, 12:56 AM IST

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் வருகின்ற 28ஆம் தேதி 11வது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி தொடங்குகிறது. மாதா அமிர்தானந்த மயி கண்காட்சியைத் தொடங்கிவைக்கிறார். கண்காட்சிக்கு முன்னோட்டமாக ஆடல், பாடல் விளையாட்டு போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இதனிடையே, இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியில் வனம், வன விலங்குகளைப் பாதுகாத்தல், ஜீவராசிகளைப் பேணுதல், சுற்றுச்சூழலைப் பராமரித்தல், பெற்றோர், பெரியோர், ஆசிரியர்களை வணங்குதல், பெண்மையைப் போற்றுதல், நாட்டுப்பற்றை ஊட்டுதல் ஆகிய ஆறு கருத்துக்களின் அடிப்படையில் பாரதீய சம்ஸ்கார கானம் என்ற இசை நிகழ்ச்சி மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரியில் நடந்தது.

இந்த இசை நிகச்சிக்கு, புகழ்பெற்ற பின்னணி பாடகி சுஜாதா மோகன் முன்னிலை வகித்தார். இதேபோல், புகழ்பெற்ற பாடகிகளான சைந்தவி பிரகாஷ் குமார், சுசித்ரா பாலசுப்பிரமணியன், வித்யா கல்யாணராமன், வினயா கார்த்திக் ராஜன், கிருத்திகா நடராஜன் ஆகியோர் மேடையிலிருந்து மாணவிகளை வழிநடத்தினர். இந்த ஒட்டுமொத்த இசைப் போர்ப்படையை இசை மழலை ராம்ஜி ஒருங்கிணைப்பாளராக இருந்து வழிநடத்தினார்.

ஆன்மிக கண்காட்சி முன்னோட்ட கலை நிகழ்ச்சி

மேலும் தமிழ், சமஸ்கிருதம், குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, இந்தி, ஒடிசா, மலையாளம், பஞ்சாபி,, கன்னடம், பெங்காலி ஆகிய 11 மொழிகளில் மாணவிகள் பாடல்களைப் பாடினர். சென்னை, அதன் புறநகர் பகுதிகளிலுள்ள 40 பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:

எப்போதும் முதலிடத்தில் பொன்னியின் செல்வன்!

Intro:மீனம்பாக்கத்தில் ஆன்மிக கண்காட்சிக்காக 10 ஆயிரம் மாணவிகள் 11 மொழியில் பாடல்
Body:
மீனம்பாக்கத்தில் ஆன்மிக கண்காட்சிக்காக 10 ஆயிரம் மாணவிகள் 11 மொழியில் பாடல்

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் வருகிற 28ந் தேதி 11வது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி தொடங்குகிறது. மாதா அமிர்தானந்த மயி கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார்.

கண்காட்சிக்கு முன்னோட்டமாக ஆடல்,பாடல் விளையாட்டு போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியில் வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல், ஜீவராசிகளைப் பேணுதல்,சுற்றுச்சூழலைப் பராமரித்தல், பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியர்களை வணங்குதல், பெண்மையைப் போற்றுதல் மற்றும் நாட்டுப்பற்றை ஊட்டுதல் ஆகிய 6 கருத்துக்களின் அடிப்படையில்
பாரதீய சம்ஸ்கார கானம் என்ற இசை நிகழ்ச்சி மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரியில் நடந்தது.

புகழ்பெற்ற பின்னணி பாடகி சுஜாதா மோகன் இசை நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

புகழ்பெற்ற பாடகிகளான சைந்தவி பிரகாஷ் குமார், சுசித்ரா பாலசுப்பிரமணியன், வித்யா கல்யாணராமன், வினயா கார்த்திக் ராஜன், மற்றும் கிருத்திகா நடராஜன் ஆகியோர் மேடையிலிருந்து மாணவிகளை வழிநடத்தினர்.

இந்த ஒட்டுமொத்த இசைப் போர்ப்படையை இசை மழலை ராம்ஜி ஒருங்கிணைப்பாளராக இருந்து வழிநடத்தினார்.

இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியின் 6 கருத்துக்களான வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல், ஜீவராசிகளைப் பேணுதல், சுற்றுச்சூழலை பராமரித்தல், பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியர்களை வணங்குதல், பெண்மையைப் போற்றுதல் மற்றும் நாட்டுப்பற்றை ஊட்டுதல் ஆகிய 6 கருத்துக்களில் பாடல்கள் பாடப்பட்டன.

தமிழ், சமஸ்கிருதம், குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, இந்தி, ஒடிசா, மலையாளம், பஞ்சாபி,, கன்னடம், பெங்காலி ஆகியப் 11 மொழிகளில் மாணவிகள் பாடல்களைப் பாடினர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 40 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 10 ஆயிரம் மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.