ETV Bharat / state

ஆட்டோ ரேஸில் உயிரைப் பறிகொடுத்த மெக்கானிக்! - ஆட்டோ ரேசில் உயிரைப் பறிகொடுத்த மெக்கானிக்

சென்னை: ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட மெக்கானிக் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

auto
author img

By

Published : Nov 14, 2019, 10:01 PM IST

Updated : Nov 14, 2019, 11:46 PM IST

சென்னை வில்லிவாக்கம் திருவேங்கட அய்யர் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (30). இவர் ஆட்டோ மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், பிரபாகரன் மோட்டார் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டதாகக் கூறி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது நண்பர்கள் சேர்த்தனர்.

ஆனால், சிகிச்சைப் பலனின்றி பிரபாகரன் உயிரிழந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மருத்துமனைக்குச் சென்ற காவல் துறையினர் பிரபாகரனின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதிலைக் கூறியுள்ளனர்.

சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட போது, ஏற்பட்ட விபத்தின் காரணமாகவே பிரபாகரன் இறந்தார் என தெரிய வந்தது.

ஆட்டோ ரேஸ்

இதையும் படிங்க : 'ஐஐடி மாணவி இறப்பில் நேர்மையான விசாரணை தேவை’ - முத்தரசன்

இதுபற்றி காவல் துறையினர் விவரிக்கும் போது, "ஆட்டோ மெக்கானிக்கான பிரபாகரன் ரேஸ் ஆட்டோக்களை தயார் செய்வதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை போரூர் சுங்கச்சாவடியில் இருந்து தாம்பரம் வரை தாம்பரம் - புழல் பைபாஸ் சாலையில் பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ரேஸில் ஈடுபட்டுள்ளன.

இவற்றைக் கண்காணிக்க 50க்கும் மேற்பட்ட உயர் ரக மோட்டார் இருசக்கர வாகனத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் வந்துள்ளனர். ரேஸ் ஆட்டோவை பிரபாகரன் ஓட்டி வந்துள்ளார். இதனிடையே, தாம்பரம் பைபாஸ் தரப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது, முன் பகுதியில் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது வேகமாக வந்த ரேஸ் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், தலைகுப்புற கவிழ்ந்து பிரபாகரனுக்கு காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை மறைக்கவே, மோட்டார் இருசக்கர வாகனத்திலிருந்து பிரபாகரன் தவறி விழுந்ததாகக் கூறி மருத்துவமனையில் சேர்த்தனர் அவர்களது நண்பர்கள். இந்தச் சம்பவம் குறித்து தீவிரமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்த சாலையில் அடிக்கடி இதுபோன்ற ஆட்டோ ரேஸ்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்துக் காவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : மனைவியுடன் தகராறு: 250 அடி பள்ளத்தில் குழந்தைகளை தூக்கி வீசிக் கொன்ற கணவர்!

Intro:சென்னை போரூர் பைபாஸில் ஆட்டோ ரேசில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் பலி. போலீசார் விசாரணைBody:சென்னை வில்லிவாக்கம் திருவேங்கட அய்யர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(30), இவர் ஆட்டோ மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். நேற்று மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டதாக கூறி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது நண்பர்கள் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி பிரபாகரன் இறந்து போனார் இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் உடன் இருந்த நண்பர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள் Conclusion:இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் ஆட்டோ ரேசில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபத்தில் பிரபாகரன் இறந்தது தெரியவந்துள்ளது .இது பற்றி போலீசார் விவரிக்கும் போது பிரபாகரன் ஆட்டோ மெக்கானிக்காக வேலை செய்து வந்த நிலையில் ரேஸ் ஆட்டோக்களை தயார் செய்வதும் வாடிக்கை. இந்தநிலையில் நேற்று அதிகாலை போரூர் டோல்கேட்டில் இருந்து தாம்பரம் வரை தாம்பரம் - புழல் பைபாஸ் சாலையில் பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ரேசில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றை கண்காணிக்க 50க்கும் மேற்பட்ட உயர் ரக மோட்டார் சைக்கிளில் ஆட்டோ ஓட்டுனர்கள் வந்துள்ளனர். ரேஸ் ஆட்டோவை பிரபாகரன் ஓட்டி வந்துள்ளார். தாம்பரம் பைபாஸ் தரப்பாக்கம் அருகே
சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது வேகமாக வந்த ரேஸ் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் முற்றிலும் முன்பக்கம் நசுங்கி பிரபாகரனுக்கு காயம் ஏற்பட்டது. ஆட்டோ ரேசில் ஈடுபட்டு விபத்து ஏற்பட்டது தெரிந்தால் பிரச்சினை என்று மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததாக கூறி மருத்துவமனையில் சேர்த்தது தெரியவந்ததையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சாலையில் மீண்டும் அதிகாலை நேரங்களில் ஆட்டோ ரேசில் ஈடுபடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனை போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Last Updated : Nov 14, 2019, 11:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.