சென்னை: 2016-க்கு பிறகு மேயர் தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் அனைத்து பணிகளையும் கவனித்து வந்தனர். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவை சார்ந்த பிரியா மேயராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனால் 6 ஆண்டுகள் கழித்து 2022-2023ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதற்கான மாமன்ற கூட்டம் கடந்த மாதம் 9ஆம் தேதி கூடியது.
இந்த நிலையில் வரும் மே 30ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சாதாரண மாமன்ற கூட்டம் கூடுகிறது என்றும்; இந்த கூட்டத்திற்கு அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் மாநகராட்சி மேயர் பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த மாமன்றக் கூட்டத்தில் வார்டு வாரியாக இருக்கும் பிரச்னை, முக்கியான தீர்மானங்கள் எனப் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
இதையும் படிங்க:30 ஏக்கர் நிலத்தில் மருத்துவப்பயன்பாட்டினை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை மாநகர மேயர் பிரியா