ETV Bharat / state

வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பரபரப்பு

author img

By

Published : Jul 31, 2021, 7:59 PM IST

Updated : Jul 31, 2021, 8:16 PM IST

சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Mall bomb threatning
Mall bomb threatning

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மதியம் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர் திருமங்கலம் நூறடி சாலையில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகத்தில் ( வி.ஆர்) வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அந்த வெடிகுண்டு உடனடியாக வெடிக்கும் என கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.

இதனையடுத்து திருமங்கலம் காவல் நிலைய போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் அந்த வணிக வளாகத்திற்கு சென்றனர். அங்கு இருந்த சுமார் 400 பேரை போலீசார் வெளியேற்றினர்.

சோதனை

வணிக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர். இதனிடையே செல்போன் எண் மூலம் சைபர் கிரைம் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை தேடினர்.

9 வயது சிறுவன்

பின்னர் அம்பத்தூரில் உள்ள 9 வயது சிறுவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து தாத்தா பாட்டியுடன் வசித்து வரும் சிறுவன் உள்ளிட்ட குடும்பத்தினரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

இதையும் படிங்க : ஆகஸ்ட் 1, உங்கள் பர்ஸை பதம் பார்க்கும்!

Last Updated : Jul 31, 2021, 8:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.