சென்னையில் நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதால் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், “பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளைத் தவிர வெளியே சுற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வங்கி மற்றும் உணவு டெலிவரி செய்யும் நபர்கள் முறையான அடையாள அட்டையுடன் செல்ல வேண்டும்.
போலியான அடையாள அட்டையுடன் செல்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் வாகனங்கள் இயக்க அனுமதியில்லை” என்றும் கூறியுள்ளது.