ETV Bharat / state

MGR Birthday: எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் முதியவர்களைத் தாக்கிய எஸ்.ஐ - அதிரடியாக ட்ரான்ஸ்ஃபர் - கொத்தவால்சாவடி மார்க்கெட்

MGR Birthday: எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் உணவு வாங்க முண்டியத்துக் கொண்ட பெண்கள், முதியவர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் கொத்தவால்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

உதவி ஆய்வாளர்
உதவி ஆய்வாளர்
author img

By

Published : Jan 18, 2023, 4:29 PM IST

எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் முதியவர்களைத் தாக்கிய எஸ்.ஐ - அதிரடியாக ட்ரான்ஸ்ஃபர்

MGR Birthday: சென்னை: எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழைகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் வள்ளல் குணம் கொண்டவர், எம்.ஜி.ஆர். என நாடு அறிந்ததே. அதன் காரணமாக அரசியல் கட்சியினர் உள்பட பலர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.

சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கொத்தவால்சாவடி மார்க்கெட் பகுதியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு விழா நடைபெற்றது. அதிமுகவினர் சார்பில் நடத்தப்பட்ட விழாவில், பொது மக்களுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஏழை எளிய மக்கள் பசியாறும் வகையில் இலவச உணவு வழங்கப்பட்டது.

ஏறத்தாழ 5ஆயிரம் பேர் நலத் திட்ட உதவிகளை பெற குவிந்ததாக கூறப்படுகிறது. இதனால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விழாவுக்குப் போதிய அளவில் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர்.

போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்படாத விரக்தியில் கொத்தவால்சாவடி எம்.5 காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், கூட்டத்தை கலைக்க காட்டு மிராண்டித் தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் இருந்த பெண்கள், முதியவர்கள் என பாராமல் அனைவரையும் பிடித்து கீழே தள்ளிவிடுவதும், முதியவரை எட்டி உதைப்பதுமாக உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மோசமான அணுகுமுறையில் நடந்து கொண்டதாக பொது மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், கூட்டத்தைக் கலைக்க காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்ட காவல் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மீது காவல் துறை உயரதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள், பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதியவர்கள் என்றும் பாராமல் எட்டி உதைத்த கொத்தவால்சாவடி காவல் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் கட்டுப்பாட்டு அறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வடக்கு மண்டல இணை காவல் ஆணையர் ரம்யா பாரதி, காவல் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணனை கட்டுப்பாட்டு அறைக்கு பணி மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணனிடம் துறை ரீதியான விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழகமா? தமிழ்நாடா? விளக்கம் அளித்த ஆளுநர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.