ETV Bharat / state

ஆதரவற்றோருக்கு சொந்த பணத்தில் உணவளிக்கும் சென்னை காவல் ஆய்வாளர்! - food to beggars and orphans

சென்னை: ஆதரவற்றோருக்கு சொந்த பணத்தில் உணவளித்து வருகிறார் திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் சீதாராமன்.

ஆதரவற்றவர்களுக்கு சொந்த பணத்தில் உணவளிக்கும் சென்னி காவல் ஆணையர்...!

author img

By

Published : Sep 16, 2020, 5:14 PM IST

Updated : Sep 19, 2020, 2:52 PM IST

சென்னை திருவல்லிக்கேணியில் காவல் ஆய்வாளராக பணியாற்றுகிறார் சீதாராமன். இவர் ஞாயிற்றுக்கிழமை தோறும் சாலையோரங்களில் உள்ள ஆதரவற்றோருக்கும், உணவின்றி தவிப்பவர்களுக்கும் தனது சொந்த செலவில் உணவு வழங்கி வருகிறார்.

இவருடன் குற்றப்பிரிவு தலைமைக் காவலர் சுதா, காவலர் ஷீபா, சமூக ஆர்வலர் கார்த்திக் உள்ளிட்டோரும் சேப்பாக்கம் பகுதியில் சாலையோரத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வாழை இலையில் விருந்து உணவு சாப்பாடு, சாம்பார், ரசம், உருளைக்கிழங்கு பொரியல் அறுசுவை விருந்தை அளித்து, பசியாற்றி வருகின்றனர். ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவதற்காக வாரத்தில் 2,500 ரூபாய் வீதம் செலவிடும் சீதாராமன், மாதத்தில் 10 ஆயிரம் ரூபாயை தனது சம்பளத்தில் இருந்து ஒதுக்கி விடுகிறார். இவரின் இந்த சேவைக்காக யாரிடமும் பணம் கேட்பதில்லை. தனது சொந்த செலவிலேயே இந்தச் சேவையை தொடர்கிறார். ஆரம்பத்தில் 150க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கி வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக காவல் ஆய்வாளர் சீதாராமனிடம் கேட்டபோது, “வாழ்வில் நாம் செய்யும் மிக உயர்ந்த சேவையாக இதை நான் கருதுகிறேன். உணவு சாப்பிட்டுவிட்டு அவர்கள் நன்றியோடு கையெடுத்து கும்பிடும் அந்தத் தருணம் கண்ணீர் வர வைக்கிறது. அன்று முடிவு செய்தேன் என் வாழ்நாளில் இனி இச்சேவையை தொடர்வது என்று.

ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் காவல் ஆய்வாளர்!

மேலும், என் சேவையை பார்த்து சக காவலர்கள் உள்ளிட்ட பல நண்பர்களும் ஆதரவற்றோருக்கு உணவளிக்க முன் வந்துள்ளனர். என் நோக்கம் எல்லாம் ஒன்றுதான் கண்ணுக்கு தெரிந்து பசியுடன் யாரும் இல்லை என்கிற அளவிற்கு உதவ வேண்டும் என நான் விரும்புகிறேன். எனது பொருளாதார வசதி அந்த அளவிற்கு ஒத்துழைக்கவில்லை என்றாலும் படிப்படியாக அதை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இது போல் பலரும் இந்த சேவையை செய்ய முனைந்தால் சென்னை நகரில் பட்டினியாக உறங்கச் செல்பவர்கள் இருக்க மாட்டார்கள்" என்கிறார்.

சீதாராமன் போன்றவர்கள் இருக்கும்வரை, பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை குறையும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

இதையும் படிங்க...ஆதரவற்றோருக்கு வாழ்வு தரும் ஆர்.சேயா தொண்டு நிறுவனம்!

Last Updated : Sep 19, 2020, 2:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.