ETV Bharat / state

'தற்கொலையைத் தடுக்க எடுத்த நடவடிக்கையால் ஐஐடி மாணவர்களிடம் நம்பிக்கை அதிகரித்துள்ளது!' - ஐஐடி மாணவர்கள் தற்கொலை விவகாரம்

ஐஐடியில் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் வழங்கப்பட்ட ஆலோசனையால் மாற்றங்கள் தெரிகிறது எனவும்; தற்கொலை நடைபெறக் கூடாது என்பது தான் நோக்கமாக இருப்பதாகவும் ஐஐடியின் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.

Etv Bharat ஐஐடியின் இயக்குநர் காமகோடி
Etv Bharatஐஐடியின் இயக்குநர் காமகோடி
author img

By

Published : Apr 27, 2023, 5:46 PM IST

ஐஐடியின் இயக்குநர் காமகோடி

சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு ஏற்படும் மனநல அழுத்தத்தின் காரணமாக 5 பேர் சமீபத்தில் தற்காெலை செய்து கொண்டுள்ளனர். இதனைத் தடுப்பதற்கு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்காெள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாணவரும் தற்கொலை செய்துகொள்ளும்போது, ஒவ்வொரு விதமான காரணங்கள் தெரிய வருகிறது. குறிப்பாக கரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மாணவர்களையும் வெகுவாக மனரீதியாகப் பாதித்துள்ளது.

இந்த நிலையில் மாணவர்கள் தற்கொலையைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும்போது, ''மாணவர்கள் தற்கொலைகளைத் தடுக்க behappy.iitm.ac.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதல்முறையாக மாணவர்கள் தங்களுடைய மன ரீதியான குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைத் தெரிவித்து ஆலோசனைகளைப் பெறலாம். மேலும் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக மனநல ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. ஐஐடியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மன நல ஆலோசகர்களின் எண்களில் தொடர்பு கொண்டு ஆலோசனைப் பெறலாம்.

மாணவர்கள் தற்கொலை ஒவ்வொன்றுக்கும் வேறு காரணங்கள் இருக்கின்றன. அதனை ஆய்வு செய்து தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஐஐடியின் பேராசிரியர்கள் அல்லாமல் வெளியில் இருந்து ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் சபிதா, கண்ணகி பாக்கியநாதன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஐஐடி வளாகத்திற்குள் உள்ள பிரச்னைகள் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதன் அடிப்படையில் ஐஐடி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.

மூன்று மாதத்தில் 5 மாணவர்கள் தற்கொலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாக இருக்கின்றது. இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறக்கூடாது எனக் கருதுகிறேன். தனியார் மருத்துவமனை உடனும் ஐஐடி ஒப்பந்தம் செய்துள்ளது. ஐஐடி வளாகத்திற்குள் மனநல ஆலோசனை பெற விரும்பாத மாணவர்கள் தனியாரிடம் சென்று ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். மேலும் தற்பொழுது மாணவர்களின் மனநலனில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது'' எனத் தெரிவித்தார்.

மேலும், சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்காெலையைத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். அப்போது நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன், நம்பிக்கையை ஏற்படுத்தவும் நடவடிக்கையை சென்னை ஐஐடி இயக்குநர் மேற்கொண்டார். இதற்காக பேராசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, மாணவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.

மாணவர்கள் தங்களின் பேராசிரியர்களிடம் மனநலப் பாதிப்புகளை தெரிவிக்காமல் இருந்தனர். எனவே தமிழ்நாடு அரசின் தேசிய நல்வாழ்வுக்குழுவின் மனநல ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டு, தன்னம்பிக்கை வளர்க்கும் வகையில் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: Out of the Box Thinking: சென்னை ஐஐடியில் இலவசமாக படிக்க, விண்ணப்பிக்க ரெடியா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.