ETV Bharat / state

சென்னை ஐஐடியில் ஆன்லைன் மூலம் 3 மாத சான்றிதழ் படிப்பு - ஐஐடி டிஜிட்டல் ஸ்கில் இந்தியா படிப்பு

சென்னை: சென்னை ஐஐடியில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சார்ந்த 3 மாத கால சான்றிதழ் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வங்கி சார்ந்த வேலைவாய்ப்புகளில் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் இதில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

Chenna IIT campus
சென்னை ஐஐடி
author img

By

Published : Oct 8, 2020, 5:49 PM IST

கரோனோ வைரஸ் தொற்று பரவல் காரணமாக, இந்தப் பயிற்சிகள் ஆன்லைனில் முதற்கட்டமாக நடத்தப்படுகின்றன.

நிதி நிறுவனங்கள், வங்கிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து சென்னை ஐஐடியின் மேலாண்மை துறை பேராசியர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.

வங்கி மற்றும் முதலீடு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் இருந்தும், வேலைவாய்ப்புக்கான திறன் மாணவர்களிடம் குறைவாக இருப்பதால், அதற்கான திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில், இந்த 3 மாத கால பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சி முழுவதும் ஆன்லைன் மூலம் அளிக்கப்பட உள்ளது. இதில் சேர்வதற்கு https://skillsacademy.iitm.ac.in என்ற சென்னை ஐஐடியின் டிஜிட்டல் ஸ்கில் இந்தியா என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் படிப்புக்கு சென்னை ஐஐடியின் சார்பில், டிஜிட்டல் ஸ்கில் இந்தியா சான்றிதழ் அளிக்கப்படுகிறது,

இதையும் படிங்க: பல்பொருள் அங்காடியில் பாஜகவினர் சூறையாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.