ETV Bharat / state

முருகனுக்கு வழங்கிய மருத்துவ சிகிச்சை குறித்து பதிலளிக்க உத்தரவு!

சென்னை: வேலூர் சிறையில் பட்டினிப் போராட்டம் நடத்தி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள முருகனுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய, சிறைத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai highcourt ordered to cell department about rajiv gandhi killer murugan's medical treatment
author img

By

Published : Nov 7, 2019, 4:40 PM IST

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனைக் கைதி முருகனிடம் இருந்து கைப்பேசிகள் கைபற்றப்பட்டதாகக் கூறி, சமீபத்தில் தனிமைச் சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். இதனைக் கண்டித்து கடந்த 15 நாட்களாக பட்டினிப் போராட்டம் நடத்திய நிலையில் அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கக்கோரி, அவருடைய உறவினர் தேன்மொழி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், டீக்கா ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முருகனுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் சிறைத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் முருகனுக்கு சிறையில் வழங்கப்பட்டுவரும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, கால அவகாசம் வழங்க வேண்டும் என சிறைத் துறை தரப்பில் கோரப்பட்டது. இதனை ஏற்று ஒரு வாரம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், மனுவுக்குப் பதிலளிக்க சிறைத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: ’தனி அறை... உணவு கொடுக்காமல் சித்ரவதை..!’ - முருகன் முன்வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்

Intro:Body:வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள முருகனுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதி முருகனிடம் இருந்து செல்பேசிகள் கைபற்றப்பட்டதாக கூறி சமீபத்தில் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டார். இதனை கண்டித்து கடந்த 15 நாளாக உண்ணாவிரதம் இருந்த நிலையில் அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்க கோரி உறவினர் தேன்மொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்கா ராமன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, முருகனுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் முருகனுக்கு சிறையில் வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என சிறைத்துறை தரப்பில் கோரப்பட்டது.

இதனை ஏற்று, ஒரு வாரம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்க சிறைத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர்14 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.