ETV Bharat / state

மெரினாவில் நடைபாதை வியாபாரிகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - merina beach road side shop occupied case

சென்னை: மெரினா கடற்கரையில் நடைபாதை வியாபாரிகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai high court
author img

By

Published : Nov 15, 2019, 10:09 PM IST

ஆழ்கடல் மீன்பிடிப்பு குறித்து முராரி கமிஷன் உத்தரவை நடைமுறைப் படுத்த வேண்டும், மீன் பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு அரசு வழங்கும் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் அமைப்பைச் சேர்ந்த பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மெரினா கடற்கரையை ஒழுங்குபடுத்துவது குறித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, களங்கரை விளக்கம் தொடங்கி பட்டினப்பாக்கம் வரை நடைபாதை வியாபாரிகளை ஒழுங்குபடுத்த 7 மாதங்களுக்கு முன் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநகராட்சி ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

மீனவர்களுக்கு கடற்கரை ஓரத்திலேயே அடுக்குமாடி வீடு கட்டி கொடுத்துவிட்டு, சாலையை ஆக்கிரமித்து அவர்கள் வியாபாரம் செய்வதாக அவர்கள் மீதே எப்படி குற்றம் சாட்டமுடியும். நீதிமன்றம் உத்தரவிட்ட 7 மாதத்தில் மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், நடைபாதை கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டிருக்கும் என கேள்வி எழுப்பினர்.

மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நடைபாதை வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டு 1,300 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றும் மீதமுள்ள 300 பேருக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து மீண்டும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், எலியட்ஸ் கடற்கரையில் உள்ளது போல பயோ மெட்ரிக் முறை மெரினாவில் சாத்தியமில்லாத பட்சத்தில், ஆதார் எண் மூலமாக கண்காணித்து நடைபாதை வியாரபாரிகளைக் கட்டுப்படுத்தலாம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, சமூக விரோதிகள் வருகையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை போல காவல்துறையும், அரசு அலுவலர்களும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தால், நடைபாதை வியாபாரிகளால் ஏற்படும் ஆக்கிரமிப்புகள் முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்றனர்.

மேலும், மெரினா கடற்கரையில் நடைபாதை வியாபாரிகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்தும் மீனவர்களுக்கு மார்க்கெட் அமைத்து தருவது குறித்தும் மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: இந்து கோவில் பற்றி சர்ச்சைப் பேச்சு: திருமாவளவன் மீது காவல் நிலையத்தில் புகார்!

Intro:Body:ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கை போல மீண்டும் நடவடிக்கை எடுத்தால் மெரினா கடற்கரையில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆழ்கடல் மீன்பிடிப்பு குறித்து முராரி கமிஷன் உத்தரவை நடைமுறை படுத்த வேண்டும், மீன் பிடி தடை காலத்தில் மீனவகளுக்கு அரசு வழங்கும் தொகையை உயிர்த்த வழங்க வேண்டும் என மீனவர்கள் அமைப்பை சேர்ந்த பீட்டர் ராயன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மெரினா கடற்கரையை ஒழுங்குபடுத்துவது குறித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, களங்கரை விளக்கம் தொடங்கி பட்டினப்பாக்கம் வரை நடைபாதை வியாபாரிகளை ஒழுங்குபடுத்த 7 மாதங்களுக்கு முன் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநகராட்சி ஏன் இதுவரை
நடவடிக்கை எடுக்கவில்லை.

மீனவர்களுக்கு கடற்கரை ஓரத்திலேயே அடுக்குமாடி வீடு கட்டி கொடுத்துவிட்டு, சாலையை ஆக்கிரமித்து அவர்கள் வியாபாரம் செய்வதாக அவர்கள் மீதே எப்படி குற்றம் சாட்டமுடியும்.

நீதிமன்றம் உத்தரவிட்ட 7 மாதத்தில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால், நடைபாதை கடைகள் மற்றும் அக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டிருக்கும் என கேள்வி எழுப்பினர்.

மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நடைபாதை வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டு 1300 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 300 பேருக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

அதையடுத்து மீண்டும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், எலியட்ஸ் கடற்கரையில் உள்ளது போல பயோ மெட்ரிக் முறை மெரினாவில் சாத்தியமில்லாத பட்சத்தில், ஆதார் எண் மூலமாக கண்காணித்து நடைபாதை வியாரபாரிகளை கட்டுப்படுத்தலாம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வியாபாரிகள், சமூக விரோதிகள் வருகையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை போல காவல்துறையும், அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தால், நடைபாதை வியாபாரிகளால் ஏற்படும் ஆக்கிரமிப்புகள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்த நீதிபதிகள், மெரீனா கடற்கரையில் நடைபாதை வியாபாரிகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மீனவர்களுக்கு மார்க்கெட் அமைத்து தருவது குறித்தும் மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 26 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.