கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சாலையோரம் வசிப்பவர்கள், ஆதரவற்றவர்கள் உணவு கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதே போன்று கூலி வேலை செய்யும் குடும்பங்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற வழக்கறிஞரும்,சமூக ஆர்வலருமான லட்சுமி ராஜா என்பவர் ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தினந்தோறும் நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகின்றார். அதேபோல் சாலையோரம் வசிப்பவர்கள், ஆதரவற்றவர்களுக்கு இலவச உணவுகளையும் வழங்குகிறார்.
தாம்பரம் மங்களபுரம் பகுதியில் சுமார் 2,000 குடும்பங்களுக்கு காய்கறிகள், அரிசி மளிகை பொருட்கள், பால்பாக்கெட், சுமார் 1,000 பெண்களுக்கு இலவச நாப்கின்களை லட்சுமி ராஜா இன்று (ஜூன் 5) வழங்கினார்.
நியாயவிலை கடைகள் மூலம் இலவச அரிசி, எண்ணெய், தருவது போல், பெண்களின் நலன் கருதி இலவச நாப்கின்களையும் வழங்க வேண்டுமென வழக்கறிஞர் லட்சுமி ராஜா கோரிக்கை விடுத்தார்.