சென்னை: தமிழ்நாடு மின் வாரியத்திற்கு ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டது.
இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதால் ஊழலைத் தடுக்கும் வகையில், வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் தலைவர், மத்திய ஊழல் தடுப்பு ஆணையர், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஆகியோர் அடங்கிய கூட்டுப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என, மின் வாரிய முன்னாள் பொறியாளர் செல்வராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை.12) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலக்கரி இறக்குமதி தொடர்பாக வெளியிடப்பட்ட இந்த டெண்டர் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், டெண்டர் திரும்பப் பெற்றதால் வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: அரசியலுக்கு நோ சொன்ன ரஜினி: மக்கள் மன்றம் கலைப்பு!