ETV Bharat / state

'கரோனா இறப்பை மறைக்க வேண்டிய தேவை அரசுக்கு இல்லை' - chennai district news

கரோனா இறப்பை மறைக்க வேண்டிய தேவை அரசுக்கு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் தெரிவித்தார்.

chennai-health-minister-press-meet
chennai-health-minister-press-meet
author img

By

Published : Jun 13, 2021, 2:15 PM IST

சென்னை : எக்ஸ்னோரோ நிறுவனம் சார்பில் 50 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தமிழ்நாடு அரசுக்கு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌.சுப்ரமணியத்திடம் வழங்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், 'தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 573 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி மையங்களில் எப்பொழுது போடப்படும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்பதே அரசின் திட்டம். எனவே, மக்கள் யாரும் தடுப்பூசி மையங்களில் முண்டியடித்துச் செல்ல வேண்டாம்.

கறுப்புப் பூஞ்சை

கறுப்புப் பூஞ்சை நோயால் 1300 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐசிஎம்ஆர் கறுப்புப் பூஞ்சைக்கான இணை மருந்தினை பரிந்துரை செய்துள்ளது. அதனடிப்படையில் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. நாளுக்கு நாள் குணமடைவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டுமென தமிழ்நாடு நிதியமைச்சர் மத்திய அரசுக்கு வலியுறுத்தினார்.

பேரிடர் கால மருந்துகளுக்கு மத்திய அரசு வரி குறைப்பு அறிவித்துள்ளது, முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி. கரோனா இறப்பை மறைக்க வேண்டிய தேவை அரசுக்கு இல்லை. மத்திய அரசு கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு என்ன நிவாரணம் கொடுக்கிறது என்று எல்.முருகன் தெளிவுபடுத்த வேண்டும்.

கரோனா நிலவரம்

மேலும் கரோனா தொற்றினால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவுக்கு மட்டுமே நிதியுதவி அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் அளிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டில் கரோனா தொற்று முதல் அலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. திமுக ஆட்சிக்கு வரும்போது தொற்றின் அளவு 20 ஆயிரத்தைக் கடந்து இருந்தது. அது அதிகபட்சமாக 36 ஆயிரம் வரை சென்றது. தற்போது குறைந்து வந்து பதினைந்து ஆயிரத்திற்கு குறைவாக வருகிறது.

புதுச்சேரியில் டாஸ்மாக் கடைகள் திறப்பு

தொற்றின் அளவு குறைந்து வருவதால் வருவாய்த் துறையின் வழிகாட்டுதலின்படி டாஸ்மாக் கடைகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எடப்பாடி ஆட்சியில் கரோனா உச்சத்தில் இருந்தபோது, அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு டாஸ்மாக் கடைகள் மட்டும் திறந்திருந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில் குறிப்பாக புதுச்சேரியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கெல்லாம் சென்று கறுப்புக் கொடி காட்டிய பின் தமிழ்நாட்டில் போராட்டம் செய்யட்டும்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டில் தடுப்பூசி இருப்பு

மத்திய அரசிடம் இருந்து கரோனா தடுப்பூசி 1.10 கோடி பெறப்பட்டுள்ளது. அதில் 1 கோடியே 1 லட்சம் அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கையிருப்பில் 5.39 லட்சமாக தடுப்பூசி உள்ளது. உண்மையிலேயே மக்கள் மீது பாஜகவினருக்கு அக்கறை இருக்குமேயானால், மத்திய அரசிடம் இருந்து கூடுதல் தடுப்பு மருந்துகளை பெற்றுத்தர வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் யாரையும் விமர்சனம் செய்யக் கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் தேவையான தகவல்களை மட்டுமே பதிலாக கூறி வருகிறோம். யாரையும் விமர்சனம் செய்யவில்லை’ எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.