ETV Bharat / state

திருப்போரூர் துப்பாக்கிச் சூடு வழக்கு: திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்பட 11 பேருக்கு நிபந்தனை பிணை!

திருப்போரூர் துப்பாக்கி சூடு: திமுக எம்எல்ஏ இதயவர்மன் உள்பட 11 பேருக்கு நிபந்தனை பிணை!

author img

By

Published : Aug 6, 2020, 2:06 PM IST

Updated : Aug 6, 2020, 3:53 PM IST

14:03 August 06

சென்னை: திருப்போரூர் துப்பாக்கிச் சூடு வழக்கில் கைதான திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்பட 11 பேருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றியக்குழு தலைவரான இவர் திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்துவருகிறார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்எல்ஏ இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தின் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த நிலத்திற்குச் செல்ல அருகில் உள்ள கோயில் நிலத்தை அவர் ஆக்கிரமித்து சாலை அமைத்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு எம்எல்ஏ தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அந்த நிலத்தை பார்வையிடுவதற்காக இமயம்குமார் சென்னையைச் சேர்ந்த ரவுடிகளுடன் செங்காடு சங்கோதி அம்மன் கோயில் அருகே சென்றார். அங்கு எம்எல்ஏவின் தந்தை லட்சுமிபதிக்கும் இமயம்குமார் தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது இமயம்குமாருடன் வந்த ரவுடி கும்பல், திடீரென எம்எல்ஏவின் தந்தை லட்சுமிபதி, அவரது உறவினர் குருநாதன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர்.

பதிலுக்கு லட்சுமிபதி தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம்குமாரின் காரை நோக்கி சுட்டார். இதையடுத்து அரிவாளால் வெட்டப்பட்டதால் படுகாயமடைந்த லட்சுமிபதி, குருநாதன் ஆகியோர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், காயமடைந்த இமயம்குமார் தரப்பினர் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்டோர் மீது திருப்போரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து இதயவர்மன் உள்ளிட்ட 11 பேர் ஜூலை 12ஆம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனையடுத்து இதயவர்மன் உள்ளிட்டோர் பிணை வேண்டி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிணை மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனால் இதயவர்மன் உள்ளிட்ட 11 பேர் பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில், உரிமம் காலாவதியான துப்பாக்கி கொண்டு இதயவர்மன் சுட்டதாகவும், இதயவர்மனுக்குச் சொந்தமான இடத்தில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், எம்.எல்.ஏ இதயவர்மன் தோட்டாக்கள் உற்பத்தி செய்தாரா? அவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏதும் உள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஆக. 6) நீதிபதி சதீஷ் குமார் முன்னிலையில் விசாரணைக்குவந்தது. அப்போது, சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் நிறுவனத்திற்கு எம்.எல்.ஏ இதயவர்மன் மூன்று லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்க வேண்டும் என்றும்; அதுமட்டுமின்றி கைதான 11 பேரும் தலா  10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த பிணையையும், அதே தொகைக்கான இருநபர் பிணைத் தொகையை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும் 'வழக்கில் 26 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன; இதில் தொடர்புடையவர்களுக்கு ஏற்கெனவே பிணை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, துப்பாக்கிச் சூடுக்குள்ளானவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அதனால் இவர்களுக்கு பிணை வழங்குகிறேன்' என நிபந்தனை பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், மறு உத்தரவு வரும் வரை இதயவர்மன் வேலூர் நகர காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும்; மற்ற 10 பேர் திருப்போரூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க....திமுக எம்எல்ஏவிற்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பா? காவல்துறை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்!

Last Updated : Aug 6, 2020, 3:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.