சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, அண்ணா தெரு ஆகிய சுற்றுவட்டாரப்பகுதிகளில் இளைஞர்களிடையே கடந்த சில மாதங்களாகவே கஞ்சா புகைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. மதுபோதை, கஞ்சா போதையில் உள்ளவர்கள் அடிக்கடி அந்தப் பகுதியில் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு (ஏப்ரல் 29) இதே போல் கஞ்சா புகைத்தபோது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் யார் பெரியவர் என்ற போட்டியும் எழுந்துள்ளது. வாக்குவாதம் முற்றியதால் இரு தரப்பைச் சார்ந்தவர்களும் மாறி, மாறி கற்கள், கட்டை, கத்தி ஆகியவற்றால் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் அந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் சிலருக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, அந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் 10க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் கற்கள், கட்டை கொண்டு தாக்கிக் கொள்ளும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோதல் சம்பவத்தின் போது அப்பகுதி மக்கள் அலறி கொண்டு ஓடும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
இது தொடர்பாக கொடுங்கையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: மருத்துவர்கள், செவிலியருக்கு முழு பாதுகாப்பு உள்ளதா? - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு