ETV Bharat / state

குறைந்தபட்ச பென்ஷன் மாதம் ரூ.9,000 வழங்க வேண்டும் - பென்ஷனர்கள் சங்கம் கோரிக்கை

author img

By

Published : May 8, 2022, 10:32 PM IST

சென்னையில் பென்ஷனர்கள் சங்கங்களின் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில், குறைந்தபட்ச பென்ஷன் மாதம் ரூ.9,000 வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பென்ஷனர்கள் சங்கம் கோரிக்கை
பென்ஷனர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: கேரள சமாஜம் அரங்கத்தில் இபிஎஃப் 95 பென்ஷனர்களின் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. அப்போது, குறைந்தபட்சமாக பென்ஷன் தொகை மாதம் ரூ.9,000 வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இபிஎஃப் 95 பென்ஷனர்கள் கடந்து வந்த பாதை:

இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு அன்றைய பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு, 1952இல் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை சட்டமாகக் கொண்டு வந்தார். தொழிலாளியும் நிர்வாகமும் சம பங்களிப்புடன் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. 1971இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, குடும்ப ஓய்வூதியத் திட்டம் 1971 என்ற திட்டத்தின் மூலம் தொழிலாளி மரணமடைந்த பிறகு அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

தொழிலாளர்களும், தொழிற்சங்கமும் தொடர்ந்து போராடியதன் விளைவாக இபிஎஃப் 1995 ஓய்வூதியத் திட்டம் 1995 நவம்பர் 16அன்று அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஒன்றிய அரசு 1.16% பங்களிப்பும், தொழிலாளி தனது பங்களிப்பாக, நிர்வாகம் செலுத்தும் வருங்கால வைப்பு நிதியின் பங்களிப்பான 12% லிருந்து 8.33% ஐ பென்ஷன் நிதிக்கான பங்களிப்பாகச் செலுத்த வேண்டும்.

2008இல் இந்தத் திட்டத்தில் உள்ள இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை தன்னிச்சையாக ஒன்றிய அரசு ரத்து செய்தது. ரத்து செய்ததை எதிர்த்து இபிஎஃப் பென்ஷனர்களின் தொடர் போராட்டத்திற்குப் பிறகு, மத்தியில் ஆட்சியிலிருந்த மன்மோகன்சிங் அரசு குறைந்த பட்ச பென்ஷனை அமல்படுத்த பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பகத்சிங் கோஷ்யாரி எம்.பி., தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

அனைத்துத் தரப்பு கருத்துகளையும் கேட்ட நாடாளுமன்றக்குழு, தொழிலாளி செலுத்துவது போன்று ஒன்றிய அரசும் தனது பங்களிப்பாக பென்ஷன் நிதிக்கு 8.33% பங்களிப்பு செலுத்த வேண்டும் என்றும், பென்ஷன் தொகைக்கு செலுத்தப்படும் சம்பள வரம்பை ரூ.6500 லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசிற்கு பரிந்துரை செய்தது.

மேலும் குறைந்தபட்ச பென்ஷனாக இடைக்கால நிவாரணமாக ரூ.3000 வழங்கப்பட வேண்டும் என்றும், பென்ஷனை பஞ்சப்படியுடன் இணைக்க வேண்டும் என்றும்; 2013இல் ஒன்றிய அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 2014இல் குறைந்தபட்ச பென்ஷனாக ரூ.1000 மட்டுமே வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஆனால், இது எங்களுக்கு போதுமானதாக இல்லை என கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக இன்று (மே8) சென்னையில் மாநாடு நடைபெற்றது.

எந்த சலுகைகளும் கிடையாது: இதுகுறித்து நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பேட்டி அளித்த இபிஎஃப். 95 பென்ஷனர்கள் சங்க செயலாளர் பாபு, "இந்தியா முழுவதும் 70 லட்சம் பேரும், தமிழ்நாடு, புதுவையில் 9 லட்சம் பேரும் இபிஎஃப் பென்ஷனர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையான 65 % சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்த பென்ஷன் என மாதம் ரூ.1000 பெறுபவர்கள்.

பென்ஷனர்கள் சங்கம் கோரிக்கை

இந்த குறைந்த பட்ச பென்ஷனுக்கும் விலைவாசி உயர்வை ஈடுகட்டும் பஞ்சப்படி என்பதும் கிடையாது. இவர்களுக்கு இலவச மருத்துவ வசதியோ, மருத்துவப்படியோ கிடையாது. இன்றைய ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் பரிந்துரையான குறைந்தபட்ச பென்ஷனை உயர்த்தி மாதம் ரூ.2000 ஆக வழங்கலாம் என்பதைக்கூட ஒன்றிய அரசு ஏற்கவில்லை.

குறைந்தபட்ச பென்ஷன் மாதம் ரூ.9000 வழங்க வேண்டும். இபிஎஃப் பென்ஷனர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். 2008 முதல் பறிக்கப்பட்ட சலுகைகளை திருப்பி வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை ஈடுகட்ட பஞ்சப்படி, இலவச மருத்துவ வசதி போன்ற வசதிகளை ஒன்றிய அரசு செய்து தர வேண்டும். கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வழங்குவது போல மாநில ஓய்வூதியத்தில் ரூ.1600 கூடுதலாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கின்றோம்" எனக் கூறினார்.

இம்மாநாட்டில் சிஐடியுவின் முன்னாள் அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், சிஐடியுவின் தமிழ்நாடு மற்றும் புதுவையின் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், டிரஸ்ட் தமிழ்நாடு பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி உள்ளிட்ட அனைத்து இபிஎஃப் பென்ஷன் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இரண்டு சிலிண்டர்களுக்கான விலையை ஒன்றுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது - ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.