ETV Bharat / state

'ஆளும் கட்சியின் கைக்கூலியாக செயல்படும் தேர்தல் ஆணையம்...!'

சென்னை: தேர்தல் ஆணையம் நேர்மையாக இல்லை. அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

ஆறுமுக நயினார்
author img

By

Published : Apr 3, 2019, 3:25 PM IST

சென்னை கிண்டியில் இந்தியத் தேர்தல் அலுவலர்கள் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் கருத்துகள் மற்றும் தேர்தல் முறைகேடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதன்பின்னர்,திரிணமுல் காங்கிரஸ் மாநில தலைவர் கலைவாணர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி ஆறுமுக நயினார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கராத்தே தியாகராஜன் மற்றும் தாமோதரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது கலைவாணர், தேர்தல் நேரத்தில் பேருந்து வசதிகள் இல்லாத பகுதிகளுக்கு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி ஆறுமுக நயினார் பேசுகையில், தமிழ்நாட்டில் 21 தொகுதியில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அலுவலர்களின்துணையோடு பணம் கொடுப்பதை தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பது இல்லை. தேர்தல் ஆணையம் நேர்மையாக இல்லை என குற்றம்சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில்பேசியகராத்தே தியாகராஜன், 'தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹுதொலைபேசியில் தொடர்புகொண்டால் பேச மறுக்கிறார். குறுஞ்செய்தி அனுப்பினாலும் பதில் இல்லை. முழுக்க முழுக்க தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது உள்ளிட்ட கோரிக்கைகளை வைக்கப்பட்டுள்ளது'என்று அவர் தெரிவித்தார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 03.04.19

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கராத்தே தியாகராஜன் மற்றும் தாமோதரன் ஆகியோர் பேட்டியளிக்கையில்,

மீதமுள்ள நான்கு சட்டமன்ற தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என கோரியுள்ளோம். தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சனாக செயல்படுவதை தடுக்க வேண்டும் என கோரியுள்ளோம். தேர்தல் ஆணையர் சத்யபிரதா எந்த போனும் எடுப்பதில்லை. மெசேஜ் அனுப்பினாலும் பதில் இல்லை.. ஒருதலை பட்சமாக நடந்துகொள்கிறார். சபேசன் என்பவர் ஆளும் கட்சியினருக்கு வேண்டப்பட்டவர் அவர் வீட்டில் கோவை பள்ளபாளையத்தில் எடுத்த பணம் உள்ளிடவை தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்படுகிறது. அதிகாரிகள் அனைவரும் சாமானிய ஊழியர்கள் கூட பறக்கும் படை போல் செயல்படுகின்றனர். வீடியோ பதிவுகள் அனைத்தும் பி.ஆர்.ஓ வுக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர் பணம் பறிமுதல் செய்ததில் பாரபட்சம் உள்ளது. முழுக்க முழுக்க தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதை தடுக்க வேண்டும் என கோரியுள்ளோம். நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்புகிறேன்.. என்றார்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.