பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் தொலைக்காட்சிக்கு சந்திரயான் 2 குறித்து பேட்டியளித்தார். அப்போது முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு அவரது தாய் மாமன் மடியில் உட்கார வைத்து இந்தியாவில் மொட்டை போடவில்லை என மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசினார்.
இந்நிலையில், அவதூறாக பேசிவரும் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யவேண்டும் என சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.