சென்னை: அஇஅதிமுக சட்டப்பேரவைக் கட்சித் துணைத் தலைவராக, அதிமுக சட்டப்பேரவை எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஓ.பன்னீர் செல்வம் ஜுன் 14ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து நேற்று (ஜுன் 15) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை ஆர்.பி. உதயகுமார், பெரியபுள்ளான், அய்யப்பன் ஆகிய மூன்று மதுரை மாவட்ட எம்.எல்.ஏக்களும், முன்னாள் அமைச்சர் காமராஜும் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வத்தை, அதிமுக சென்னை மாவட்டச் செயலாளர்கள் இன்று நேரில் சந்தித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது தியாகராய நகர் சத்யா, விருகம்பாக்கம் ரவி, பாலகங்கா உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதன்மூலம் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தொண்டர்களிடையே மதிப்பு பெருகி வருவதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஓ.பி.எஸ் - நடந்தது என்ன?