உலகம் முழுவதும் கரோனா வைரசால் வேகமாகப் பரவிவருகிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும், கரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று (மே 22) மட்டும் 786 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14,753ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, சென்னையில் கரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று சென்னையில் மட்டும் 569 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன்மூலம் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,364ஆக அதிகரித்துள்ளது.
இந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், மண்டல வாரியாக கரோனா பாதிக்கப்பட்டோரின் விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து வீடு திரும்பிய பெண் பயிற்சி காவலர்களுக்கு பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்பு.