சென்னை: கரோனா பரவலை தடுக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை 97.69% முதல் தவணை தடுப்பூசியும், 86.62% இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 6,02,998 முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று பரவல் குறைந்திருந்த நிலையில், தற்போது கடந்த இரண்டு நாள்களாக சற்று அதிகரித்துள்ளது. மேலும் பண்டிகை கால விடுமுறைகள் நெருங்கி வரும் வேளையில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணியவும், தகுந்த இடைவெளியை பின்பற்றவும், கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சளி காய்ச்சல் இருப்பின் சுயசிகிச்சை மேற்கொள்ளாமல் மருத்துவர்களை அணுகவும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுத் தனிமையில் உள்ளபோது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும், வீட்டில் உள்ள பிற நபர்களும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் எனவும் மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: புதிய தலைமைச்செயலகத்திற்கு அம்பேத்கர் பெயர் - தெலங்கானா அரசு அறிவிப்பு!