ETV Bharat / state

புயலை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மாநகராட்சி

புயல் எதிரொலியாக அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

chennai Corporation  chennai Corporation prepares to face the storm  precaution  chennai  cyclone  Corporation  Corporation prepares to face the storm  மாநகராட்சி  சென்னை மாநகராட்சி  புயலை எதிர்கொள்ள தயார் ஆகும் மாநகராட்சி  சென்னை  புயல் நடவடிக்கை
சென்னை மாநகராட்சி
author img

By

Published : Dec 7, 2022, 1:51 PM IST

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (டிச.7) மாலை புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் நாளை (டிச.8) முதல் மூன்று நாட்களுக்கு சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவை பின்வருமாறு:

  • கடந்த மழைப்பொழிவின்போது மழைநீர் அதிகம் தேங்கிய அனைத்து இடங்களிலும் மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • தேவைப்படும் இடங்களில் கூடுதல் மோட்டார்களையும் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
  • 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையிலான 3 நாட்கள், 24 மணி நேரமும் மாநகராட்சி களப்பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும்.
  • சுழற்சி முறையில் பணியாளர்களுக்கான வேலை நேரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
  • அனைத்து வார்டுகளிலும், 10 தற்காலிக தொழிலாளர்கள் தயார் நிலையில் இருப்பதை மண்டல அதிகாரிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும் .
  • மண்டல வாரியாக உள்ள அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்.
  • வலுவற்ற நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டும்.
  • மண்டல அளவிலான அதிகாரிகள் மரங்கள் அகற்றப்படுவதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
  • மர அறுவை எந்திரம் மற்றும் மரங்களை வெட்டி அகற்றும் சக்திமான் எந்திரம் போன்ற அனைத்து எந்திரங்களும் தயார் வைத்திருக்க வேண்டும்.
  • ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் என அனைத்து மழைநீர் வடிகால்களிலும் மழைவெள்ள நீர் தடையின்றி வெளியேற்றுவதற்கு ஏற்ற முறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதை இன்று மாலைக்குள் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
  • அனைத்து வார்டுகளிலும் மருத்துவக் குழுக்கள் தயாராக இருக்க வேண்டும்
  • போதுமான மருந்துகள் மருத்துவமனைகளில் இருப்பு இருப்பதை மருத்துவக் குழுவினர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • மாநகராட்சி மின்துறையினர் TANGEDCO (Tamil Nadu Generation and Distribution Corporation) அதிகாரிகள் உடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அதிகாரிகள் அகற்றவேண்டும்.

இதையும் படிங்க: இன்று மாலை உருவாகிறது மாண்டஸ் புயல்(Mandous Cyclone):எங்கெங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.