சென்னை: மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் இன்று (ஆகஸ்ட் 31) ஆகஸ்ட் மாதத்திற்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேள்வி நேரத்தில் பேசிய கவுன்சிலர்கள், சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், அம்மா உணவகம், பூங்கா, சாலை, மழைநீர் வடிகால் பணிகள், மருத்துவமனை, சுகாதார நிலையங்களிலுள்ள உள்ள காலி பணி இடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
மேலும், மண்டலத்திற்கு ஒரு பல் மருத்துவமனை, குப்பைகளை அள்ளும் வண்டிகளை சுத்தம் செய்தல், மழைநீர் வடிகாலில் இருக்கும் கழிவுகளை அகற்றுதல் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டது. மேலும் அவர்களின் வார்டுகளின் இருக்கும் குறகளையும் தேவைகளையும் கேள்வி கேட்டக, அதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பதில் அளித்து, அந்த கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கபடும் என உறுதியளித்தார்.
அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் நடத்தப்படும் பணிகள் குறித்தும் 57 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பள்ளிகள் மேம்ப்படுத்தல், பழைய கட்டடங்களை இடித்தல், புதிய பேட்டரி வாகனங்கள் கொள்முதல், மயனா பூமியை சீர்மைத்தல், திடக்கழிவு மேலாண்மை, குமரன் நகர் சாலைக்கு, மாண்டோலின் ஸ்ரீநிவாஸ் சாலை என்று பெயர் மாற்றம், கத்தீட்ரல் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு எம்.பாலமுரளிகிருஷ்ணா மேம்பாலம் என்று பெயர் மாற்றம் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
குப்பையில் இருந்து மின்சாரம்: சென்னை பெருங்குடி குப்பை கிடங்கு 225.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. அதேப்போல், கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு 342.91 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 252 ஏக்கர் பரப்பளவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
தற்போது, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பை இங்கு கொட்டப்பட்டு வருகிறது. இதனால், 66.52 லட்சம் கன மீட்டர் அளவிலான குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
தற்பொது, இதை மேம்படுத்த சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு நாளைக்கு 6ஆயிரத்து 143 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிப்படுகின்றன. இனி வரும் காலத்தில், அடுத்த 15 ஆண்டுகளில் 10ஆயிரம் மெட்ரிக் டன் முதல் 11ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் வரை தினமும் கையாள படும். ஆனால் சென்னையில் 2ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் கையாள தான் வசதி இருக்கிறது.
அதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து குப்பையில் இருந்து மின்சாரம், குப்பையில் இருந்தும் சிஎன்ஜி வாயு, குப்பையில் இருந்து, பதப்பட்ட பல பொருள்கள் என்று தயாரிக்கபடும். இதில் 20 வருடத்தில், 5,705.88 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு வருமானம் வரும் வகையிலும், அதேப்போல் இதற்கான செலவு 5,045 கோடியும் ஆகும்.
அதனால் இது, ஆபத்து இல்லாத மதிப்பீடாக இருக்கிறது. இந்த திட்டத்தை முடிக்க 18 மாதங்கள் ஆகும் எனவும் இதற்கான ஒப்பந்தபுள்ளிக்கும் திடக்கழிவு (உலர்ந்த குப்பை, ஈரமான குப்பை என பிரித்தல்) இரண்டையும் பிரித்தெடுத்து அதில் இருந்து பையோ சிஎன்ஜி, மின்சாரம் போன்றவை ஒரே இடத்தில், ஒருங்கிணைந்த கழிவு செயலாக்க வசதியை இது ஒரே இடத்தில் செய்யபடும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Tirunelveli Mayor: திருநெல்வேலி மேயர் சரவணன் ராஜினாமா? - மேயர் ஈடிவி பாரத்திற்கு அளித்த விளக்கம்!