சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நீண்ட நாள்களாக தேங்கிக் கிடந்த குப்பைகளையும், கட்டடக் கழிவுகளையும் அகற்றி தூய்மைப்படுத்த தீவிர தூய்மைப்பணி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் இரண்டு வாரங்களாக மாநகரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகளில் மொத்தம் 13 ஆயிரத்து 345 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
இதில், மூன்றாயிரத்து 260 டன் சாதாரணக் கழிவுகளும், 10 ஆயிரத்து 85 டன் கட்டடக் கழிவுகளும் அடங்கும். இவை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து மறுசுழற்சி செய்யப்படும் என மாநகராட்சி சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீவிர தூய்மைப் பணிகளை சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 614 இடங்களில் ஜூன் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை நீட்டிக்கவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 5 லட்சம் கரோனா நிவாரண நிதி வழங்கிய இயக்குநர் சுசீந்தரன்