ETV Bharat / state

'கோவளம் வடிகால் திட்டம் மூலம் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது'

சென்னை: கோவளம் வடிகால் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

prakash
prakash
author img

By

Published : Oct 27, 2020, 6:38 PM IST

சென்னை அம்மா மாளிகையில் கரோனா தடுப்பு நடவடிக்கை, சென்னையில் மழைநீர் வடிகால் துறை சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அதில், "2016ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை மாநகராட்சியில் நான்காயிரத்து 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, முதற்கட்டமாக சென்னையில் உள்ள மண்டலங்கள் 7, 11, 12 உள்பட கூவம், அடையாறு வடிநிலப்பகுதிகளில் 406 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆயிரத்து 387 கோடியோ 27 லட்சம் ரூபாய் செலவில் முடிவடைந்துள்ளது.

அடுத்த கட்டமாக கோவளம் வடிகால் திட்டம் 360 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆயிரத்து 243 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதனை மூன்று கட்டங்களாகச் செயல்படுத்த, முதல்கட்ட பணிகள் 270 கோடியே 83 லட்சம் ரூபாய் செலவில் 52 கிலோமீட்டர் தொலைவுக்குச் செயல்படுத்தப்பட்டு முடிவடையவுள்ளது. மீதமுள்ள பணிகள் இரண்டு மாதங்களில் தொடங்கப்படும். கோவளம் வடிகால் திட்டம் அமைப்பதன் மூலம் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாது.

இத்திட்டத்தின் மொத்த பரப்பளவு ஆயிரத்து 138 ஹெக்டேர், அதில் 980.7 ஹெக்டேர் பரப்பளவில் (86.21%) தற்போது வீடுகள் உள்ளன. 149 ஹெக்டர் நிலத்தில் (13.10%) சாலைகள் உள்ளன. மீதமுள்ள 7.8% ஹெக்டர் பரப்பளவில் அதாவது மொத்த பரப்பளவில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாக இந்தக் கால்வாய் அமைக்கப்படும்.

கோவளம் வடிகால் திட்டம் அமைக்கப்படும் பகுதியில் ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக 68 மி.மீ. மழை பெய்யும் என்று கணக்கெடுக்கும்பொது இதன்மூலம் 773.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதில் 303.74 மில்லியன் லிட்டர் தண்ணீர் பூமிக்குள் உறியும், மீதம் உள்ள 469.7 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீணாகச் செல்லும், ஆனால் தற்போது அமைக்கப்படும் வடிகால் திட்டத்தின் மூலம் 326.19 மில்லியன் லிட்டர் தண்ணீர் சேமிக்க முடியும். இதனால் 90% மழைநீரை நம்மால் சேமிக்க முடியும்" என்றார்.

இதையும் படிங்க: ஆந்திராவில் தடையை மீறி நடந்த அபாயகர கம்பு சண்டைத் திருவிழா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.