ETV Bharat / state

'கரோனா போரில் சிப்பாய்கள் போல மக்கள் செயல்பட வேண்டும்'

சென்னை: மக்கள் கரோனா போரில், தங்களை சிப்பாயாக மாற்றிக்கொண்டு செயல்பட வேண்டும் என கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

’கரோனா போரில் சிப்பாய்கள் போல மக்கள் செயல்பட வேண்டும்’

author img

By

Published : May 10, 2020, 7:17 PM IST

கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் ராயபுரம் மண்டல அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, 'கரோனா பரிசோதனை அதிகரித்துள்ளதால் நாளுக்கு நாள் கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எண்ணிக்கையைக் குறித்து, மக்கள் பயப்பட வேண்டாம். அடுத்த ஐந்து, ஆறு நாட்களில் பெருந்தொற்று குறைந்துவிடும். கரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின், உறவினர்களை பரிசோதிக்க 19 கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு, அந்தந்த மண்டலங்களில் பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்தியாவிலேயே, சென்னையில்தான் அதிக பரிசோதனை செய்திருக்கிறோம். மக்கள் இந்தக் கரோனா போரில், தங்களை சிப்பாயாக மாற்றிக்கொள்ள வேண்டும். பல்வேறு வார்டுகளில் பத்திற்கும் குறைவான கரோனா பாதிப்பு உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. மக்கள் வீட்டிலிருக்கும், முதியோர்களிடம் சகஜமாக பேசக்கூடாது, தகுந்த இடைவெளியுடன்தான் பேச வேண்டும். 30 விழுக்காடு மக்கள் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருக்கிறார்கள். இந்தக் கரோனா தீநுண்மி (வைரஸ்) மூக்கு, தொண்டை வழியாக உள்ளே செல்வதால், மக்கள் முகக்கவசத்தை உள்ளாடை ஆக நினைத்து, கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும். வருங்காலத்தில் முகக்கவசத்தை அணிவதை பழக்கமாக்கி வைக்க வேண்டும்' என்றார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, 'கோயம்பேடு சந்தையில் பரவிய பெருந்தொற்று கட்டுக்குள் வந்துவிட்டது. கோயம்பேடு சந்தையில் தொடர்புடைய 2 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள் விமானம் மூலமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களுக்கு யாருக்கும் கரோனா கண்டறியப்படவில்லை' என்றார்.

அவரைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசுகையில், 'கரோனா பெருந்தொற்று, எங்கிருந்து வருகிறது எனக் கூறிவிட முடியாது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். சோதனைகளை அதிகப்படுத்தி பெருந்தொற்றை குறைப்பதே எங்கள் நோக்கம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர, பிற பகுதிகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறது. வடமாநிலத் தொழிலாளர்களை விரைவில் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவிடுவோம்' என்றார்.

இதையும் படிங்க: ஆதரவற்ற குழந்தைகளின் தாய் திருநங்கை நூரி சலீம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.