ஆசிரியர்களுக்கு அழைப்புவிடுத்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறை கூறுகையில், "கரோனா தடுப்புப் பணியில் தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருவதன் காரணமாக மக்களிடையே கரோனா வைரஸ் பரவுவது பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களைக் காத்திட விருப்பமுள்ள ஆசிரியர்கள் விருப்பப் பணியாற்றிட வருமாறு சென்னை பெருநகர ஆணையர் அழைப்புவிடுத்துள்ளார்.
ஆசிரியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு அனைத்தும் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்படும் என்றும், ஆசிரியர்கள் தங்களது விவரங்களை தங்களது தலைமையாசிரியரிடம் பதிவுசெய்துகொள்ளும்படியும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆசிரியர் சங்கங்கள் தாங்களாகவே இந்தப் பணியில் ஈடுபடுவதற்கு முன்வந்துள்ளனர். அவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு அவர்களுக்கு அளிக்கும் பணிகள் குறித்து முடிவெடுக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: புலம்பெயர்ந்தவர்களுக்கான தேவைகளைப் பூர்த்திசெய்யக்கோரிய மனு மீது இன்று விசாரணை