ETV Bharat / state

வரும் 27ஆம் தேதி சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்.. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை என்ன.?

author img

By

Published : Mar 25, 2023, 4:29 PM IST

Updated : Mar 26, 2023, 5:10 PM IST

சென்னை மாநகராட்சியில் 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு 2023-2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 27ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

27ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் மாநகராட்சி பட்ஜெட்
Etv Bharat27ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் மாநகராட்சி பட்ஜெட்

சென்னை: சென்னை மாநகராட்சியில் 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்ததால், 6 ஆண்டுகளாக மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் மாநகராட்சி பட்ஜெட்டை மறைமுகமாகவே வெளியிட்டு வந்தனர். அவ்வப்போது ஆன்லைனிலும் வெளியிட்டு வந்தனர்.

கடந்த ஆண்டு மாநகராட்சி தேர்தலில் அதிக வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது. திமுக கட்சி உறுப்பினரான பிரியா ராஜன் சென்னை மேயராக பதவி ஏற்றுக்கொண்டார். மேயர் பிரியா பதவியேற்ற பின்னர், ஆறு ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

2022-2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், குறைந்த வயதுடைய மேயரான பிரியா தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கல்வி சார்ந்த பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. 2023-2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 27ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கணக்கையும், கடந்தாண்டு வரவு செலவு கணக்கையும் மேயர் பிரியா முன்னிலையில், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து வரும் 28ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் எனவும், கூட்டத்தின் இறுதியில் 2023-2024ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மாமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்று 1 ஆண்டு கழித்து தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட்டில் புதிய நலத்திட்டங்கள் இருக்கும் என சென்னை மாநகர மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்புகள் உள்ளன. குறிப்பாக காலநிலைமாற்றம் மாற்றம் மழைநீர் சேகரிக்க திட்டங்கள் இடம்பெற வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தயானந்த் கிருஷ்ணன் (சமூக ஆர்வலர்), " மாநகராட்சி பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறது, ஆனால், அது என்ன திட்டம் அத்திட்டத்திற்கு நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது உள்ளிட்ட தகவல்களை மாநகராட்சி முறையாக மக்களுக்கு வழங்குவதில்லை. பொதுவாக திட்டத்தை அறிவித்து விட்டால் எந்த வார்டுக்கு இத்திட்டம் செல்கிறது உள்ளிட்டவை மக்களுக்கு புரியாமல் போய்விடுகிறது.

தயானந்த் கிருஷ்ணன், சமூக அலுவலர்
தயானந்த் கிருஷ்ணன், சமூக ஆர்வலர்

சாலை சரிசெய்தல், பூங்கா சீரமைத்தல் உள்ளிட்டவை எந்த வார்டிற்கு வேண்டும். எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்டவை வார்டு வாரியாக அறிவிக்க வேண்டும், அதற்கான நிதி குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும். குப்பை சேகரிக்கும் மையங்களை அதிகரிக்க வேண்டும். அப்படி இருக்கும்போது குப்பைகளை சரியாக பராமரிக்க முடியும். முக்கியமாக மழைநீர் சேகரிக்க கட்டமைப்பு குறித்து இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என எதிர்பாக்கிறோம். புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு மழைநீர் சேகரிக்க உத்தரவிடவேண்டும்" என தெரிவித்தார்.

சென்னையில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது எனவே காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் அறிவிப்புகள் வரும் என்று எதிர்பாக்கிறோம் என மக்களின் குரல் ஒருங்கிணைப்பாளர் சாரு கோவிந்தன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர் கூறியதாவது, " இந்த பட்ஜெட் மக்கள் நேரடியாக அளித்த கோரிக்கையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்படாது. அதிகாரிகள் கவுன்சிலர் முடிவு செய்ததை பட்ஜெட்டில் அறிவிக்கின்றனர். ஏரியா சபா நடைபெறாததே இதற்கு காரணம், ஏரியா சபா இந்த ஆண்டு கண்டிப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

சாரு கோவிந்தன், சமூக அலுவலர்
சாரு கோவிந்தன், சமூக ஆர்வலர்

ஆனால், நடைபெறவில்லை. அது நடந்திருந்தால் மக்களுக்கு என்ன தேவை என்பதை அவர்கள் நேரடியாக வார்டு கவுன்சிலரிடம் தெரிவித்து இருப்பார்கள். அவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து பட்ஜெட் மூலம் நிறைவேற்றுவார்கள். ஆனால் அது நடைபெறாமல் இருந்ததால் ஏமாற்றமாக உள்ளது. இருப்பினும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் அறிவிப்புகள் நாங்கள் பெரிதும் எதிர்பாக்கிறோம். வார்டு அளவில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் வேண்டும்.

இது போதுமானது அளவில் இல்லாததால் தான் மழைநீர் கால்வாய்களில் கழிவுநீரை கலக்குகின்றனர். திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக புதிய திட்டங்கள் வார்டு அளவில் வேண்டும் என்றும் தூய்மை பணியாளர்கள் வாழ்வாதாரம் உயர்த்தும் புதிய அறிவிப்புகள் வேண்டும். அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தினால் மாநகராட்சி வாழ்வாதாரம் உயரும். எனவே இதை எல்லாம் இந்த பட்ஜெட்டில் எதிர்ப்பாக்கிறோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மோடி குறித்து 5 ஆண்டுகளுக்கு முன்பு குஷ்பு போட்ட ட்வீட்.. ராகுலுக்கு அடுத்து இவருக்கும் சிக்கலா.?

Last Updated : Mar 26, 2023, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.