சென்னையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கரோனா பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதனால் குணமடைந்தவரின் சதவீதம் அதிகரித்து வருகிறது.
ஆலந்தூர் மண்டலத்தை தவிர 14 மண்டலங்களிலும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 90 விழுக்காட்டிற்கும் மேல் உள்ளது. அதிகபட்சமாக திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், சோழிங்கநல்லூரில் 93 விழுக்காடு நபர்கள் குணமடைந்துள்ளனர். குறைந்தபட்சமாக ஆலந்துரில் 88 விழுக்காடு நபர்கள் குணமடைந்துள்ளனர்.
மண்டல வாரியாக குணமடைந்தவரின் பட்டியல்,
திருவெற்றியூர் - 4,593 பேர், 93 விழுக்காடு
மணலி - 2,287 பேர், 93 விழுக்காடு
மாதவரம் - 5,251 பேர், 92 விழுக்காடு
தண்டையார்பேட்டை - 12,148 பேர், 93 விழுக்காடு
ராயபுரம் -14,164 பேர், 93 விழுக்காடு
திரு.வி.க நகர் -11,077 பேர், 91 விழுக்காடு
அம்பத்தூர் - 10,326 பேர், 92 விழுக்காடு
அண்ணாநகர் -16,439 பேர், 92 விழுக்காடு
தேனாம்பேட்டை - 13,953 பேர்,92 விழுக்காடு
கோடம்பாக்கம் - 16,527 பேர், 92 விழுக்காடு
வளசரவாக்கம் - 9,449 பேர்,91 விழுக்காடு
ஆலந்தூர் - 5,619 பேர்,88 விழுக்காடு
அடையாறு - 11,330 பேர்,91 விழுக்காடு
பெருங்குடி - 5,002 பேர், 90 விழுக்காடு
சோழிங்கநல்லூர் - 4,198 பேர், 93 விழுக்காடு
இதையும் படிங்க: கரோனா மரணங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் மத்திய அரசு