கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களின் குடும்பத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து மேற்படிப்புக்கு காத்திருக்கும் மாணவ, மாணவிகளுக்கு, அவர்கள் விரும்பும் கல்லூரிகளில், விரும்பும் படிப்புகளில் சேர சென்னை பெருநகர காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு கல்லூரியில் இடம் கிடைத்த காவலர் குடும்பத்தின் மாணவர்களுக்கு, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் சேர்க்கை கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சி இன்று (செப்.2) நடைபெற்றது.
புதுப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்,
"இதுவரை 123 மாணவ- மாணவிகளுக்கு விரும்பும் கல்லூரியில் சேர இடம்பெற்றுக் கொடுத்துள்ளதாகவும், கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் இருந்து கட்டணமில்லாமலும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்!