ETV Bharat / state

கோயம்பேட்டில் அரசுப் பேருந்து மோதி வியாபாரி பலி!

சென்னை:  மதுரவாயலில் தங்கி 100 அடி சாலையில் சர்பத் கடை நடத்திவருபவர் கடைக்கு ஆட்டோவில் ஐஸ் கட்டிகள் வந்ததால் அதனை எடுக்கச் சென்றபோது அரசுப் பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானர்.

chennai Bus accident
author img

By

Published : Sep 23, 2019, 2:47 PM IST

சென்னை கடலூரைச் சேர்ந்த முருகேசன் (48) மதுரவாயலில் தங்கி 100 அடி சாலையில் சர்பத் கடை நடத்திவந்தார். அவரது கடைக்கு லோடு ஆட்டோவில் ஐஸ் கட்டிகள் வந்ததால், அதனை எடுப்பதற்காக நேற்று முன்தினம் அவரது கடைக்குச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கிண்டி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அரசுப் பேருந்து மோதிய காட்சி

இதனையடுத்து கோயம்பேடு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முருகேசன் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் தீபன் என்பவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க;

அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

Intro:Body:கோயம்பேட்டில் அரசு பேருந்து மோதி வியாபாரி பலி..

சென்னை கடலூரை சேர்ந்த முருகேசன் மதுரவாயலில் தங்கி 100 அடி சாலையில் சர்பத் கடை நடத்தி வந்தார். அவரது கடைக்கு லோடு ஆட்டோவில் ஐஸ் கட்டிகள் வந்ததால் அதனை எடுப்பதற்காக நேற்று முன்தினம் சென்றார்.பின்னர் கிண்டி நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியதில் முருகேசன் (48) பலியானார். கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருகேசன் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் தீபன் என்பவரை கைது செய்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.