சென்னை: வியாசர்பாடி சர்மா நகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது.
இன்று அதிகாலை வங்கியிலிருந்து அலாரம் சத்தம் கேட்பதாக அப்பகுதி மக்கள் வியாசர்பாடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையர்கள் கைது
அதன் அடிப்படையில் இரவு ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அங்கு சென்றனர். அப்போது வங்கி கட்டடத்தின் பின்புறம் உள்ள ஜன்னலை உடைத்து இரண்டு மர்ம நபர்கள் வெளியே வந்துள்ளனர். அவர்களை போலீசார் பிடிக்க முற்பட்டபோது ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றான்.
ஒருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.மேலும் வியாசர்பாடி சர்மா நகர் எஸ்டேட்டில் பதுங்கி இருந்த நேபாள நாட்டைச் சார்ந்த ’தான் பகதூர்(40)’ என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் தங்கி இருந்த கேளம்பாக்கம் பகுதிக்கு அழைத்துச் சென்று சோதனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:நிலத்தரகர்களை அமைப்புசாரா தொழிலாளர்களாக அறிவியுங்கள் - திருமாவளவன் வேண்டுகோள்