ETV Bharat / state

'அனைத்து சமூகத்தினரும் தமிழர்கள் என்ற அடையாளத்தோடு இருக்க வேண்டும்' - சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

மக்கள் அனைவரும் வெவ்வேறு சமூகம் என்பதை விட நாம் அனைவரும் தமிழர்கள் என்ற அடையாளத்தோடு இருக்க வேண்டும் என்று சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

இஸ்லாமிய மாணவர்களுக்கான டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் திறப்பு விழா

author img

By

Published : Oct 11, 2021, 7:59 PM IST

சென்னை: சென்னை ஆவடியில் இஸ்லாமிய மாணவர்களுக்கான டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் திறப்பு விழா இன்று (அக்.11) நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பால் வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பீட்டர் அல்போன்ஸ், "பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் சுயமாக நிற்கக்கூடிய வாய்ப்பை கொடுக்கவில்லை என்றால் எந்த சமூகமும் முன்னேற்றம் அடையாது.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படாததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெண்களுக்கு கல்வி முக்கியம் என்பதை உணர வேண்டும்.

இஸ்லாமிய மாணவர்களுக்கான டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் திறப்பு விழா

தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தமிழர்கள் என்று கூறுவது தான் நம் வெற்றிக்கான அடையாளம்.

மக்கள் அனைவரும் வெவ்வேறு சமூகம் என்பதை விட நாம் அனைவரும் தமிழர்கள் என்ற அடையாளதோடு இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இரு வீராங்கனைகளுக்கு அரசு வேலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.