சென்னை: மலேசிய நாட்டைச் சேர்ந்தவர் மஹதரன் (51). இவர் சர்வதேச போதை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. மேலும் இவா் கா்நாடகா மாநிலத்தில் பதுங்கியிருந்து, பெருமளவு போதை கடத்தலில் ஈடுபட்டுள்ளார். கா்நாடகா மாநில, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் (NCB) மஹதரனை, கடந்த 2019ஆம் ஆண்டு மஹதரனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனா். அத்தோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் தகவல் தெரிவித்துவைத்தனர்.
மஹதரன் தலைமறைவாக இருந்துகொண்டு வெளிநாடுகளில் போதை கடத்தலில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 6) நள்ளிரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் மஹதரனும் சென்னை வந்துள்ளார். விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட், ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மஹதரனுடைய பாஸ்போா்ட்டையும் ஆய்வு செய்த அதிகாரிகள், அவர் கடந்த 3 ஆண்டுகளாக போலீசாரால் தேடப்படும் சர்வதேச போதை பொருள் கடத்தல் குற்றவாளி என்பதை கண்டுப்பிடித்தனா். இதையடுத்து அவரை வெளியில் விடாமல் தனி அறையில் அடைத்து வைத்தனர். அத்தோடு பெங்களூரில் உள்ள மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து, பெங்களூரில் இருந்து மத்திய போதை தடுப்பு பிரிவு தனிப்படை போலீசாா் சென்னை விமான நிலையத்திற்கு வந்து கைது செய்து மஹதரனை அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க : தருமபுரம் ஆதீனத்தை நேரில் சந்தித்த உளவுத்துறை அலுவலர்கள்: பட்டினப் பிரவேசத்திற்கு அனுமதி?