சென்னை விமானநிலையம் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து இன்று முதல் மூன்று நாட்களுக்கு உண்ணாவிரதப் போரட்டம் நடத்தப்போவதாக விமானநிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், கூட்டு நடவடிக்கை குழுத் தலைவர் ஜார்ஜ் தலைமையில், இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள், சென்னை விமான நிலையத்தின் நிர்வாக அலுவலக வளாகத்தில் காலை 10.00 முதல் மாலை 6.00 வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதில் தினமும் சுமார் 100 ஊழியர்கள் வரை சுழற்சி முறையில் ஓய்வு நேரத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்!